LATEST NEWS
“எனக்கு அப்படி ஒரு பிரச்சனை இருக்கு”…. நடிகை ஸ்ருதிஹாசன் போட்ட பதிவால் ஷாக்கான ரசிகர்கள்….!!!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் கமல்ஹாசனின் மூத்த மகளான நடிகை ஸ்ருதிஹாசன். இவர் தற்போது ஹிந்தி மற்றும் தெலுங்கு போன்ற மொழிகளில் பிசியான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் சிரஞ்சீவியுடன் வால்டர் வீரய்யா மற்றும் பாலா கிருஷ்ணாவின் வீரசிமா ரெட்டி ஆகிய திரைப்படங்களில் தற்போது நடித்துள்ளார். இவர் சமீபத்தில் பாலகிருஷ்ணாவின் பட ப்ரொமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நிலையில் சிரஞ்சீவி படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை.
இது தொடர்பாக சுருதிஹாசனிடம் கேள்வி எழுப்பிய போது அதற்கு பதில் அளித்த ஸ்ருதிஹாசன், எனக்கு உடல்நிலை சரியில்லை. அதனால் தான் நிகழ்ச்சியில் என்னால் கலந்து கொள்ள முடியவில்லை என்று கூறினார். இதனைத் தொடர்ந்து அவர் மற்றொரு பதிவையும் பகிர்ந்து உள்ளார். அதாவது எனக்கு மனரீதியாக சில பிரச்சனைகள் உள்ளது, வீட்டிலும் சரி படபிடிப்பிலும் சரி நான் நினைத்தபடி நடக்கவில்லை என்றால் மன உளைச்சலுக்கு ஆளாகி விடுவேன், அதிக மன உளைச்சல் அடைந்தால் அதற்கு தகுந்த சிகிச்சை எடுத்துக் கொள்வேன் என்று அவர் வெளிப்படையாக கூறியுள்ளார்.
