LATEST NEWS
விவாகரத்திற்கு பிறகு நடிகை சமந்தாவிற்கு கிடைத்த பெஸ்ட் பிரண்ட்…. யார் தெரியுமா?…. அவரே சொன்ன பதில்….!!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக கொடி கட்டி பறந்து கொண்டிருப்பவர் தான் நடிகை சமந்தா. இவர் விண்ணைத்தாண்டி வருவாயா என்ற திரைப்படத்தில் தெலுங்கு ரீமேக் மூலம் நடிகையாக அறிமுகமானார். அதன் பிறகு தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் பல திரைப்படங்களில் நடித்து மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார்.
இவர் நடிகர் நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்ட நிலையில் கடந்த வருடம் இருவரும் விவாகரத்து செய்து பிரிவதாக அறிவித்தனர். விவாகரத்திற்கு பிறகு சமந்தா மயோசிடிஸ் சென்று அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டு பாதிக்கப்பட்ட சமீபத்தில் சிகிச்சை முடிந்து பழைய நிலைக்கு திரும்பினார்.
இவரின் நடிப்பில் அடுத்ததாக சாகுந்தலம் திரைப்படம் வெளியாக உள்ளது. வருகின்ற ஏப்ரல் 14ஆம் தேதி இந்த திரைப்படம் ரிலீஸ் ஆகும் நிலையில் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் பிரமோஷன் நிகழ்ச்சிகளில் சமந்தா பங்கேற்று வருகிறார்.
இந்நிலையில் நேற்று சமந்தா ரசிகர்களுடன் ட்விட்டரில் உரையாடினார். அப்போது ரசிகர்கள் தான் தனக்கு எல்லாமே என்று கூறிய சமந்தா பல கேள்விகளுக்கு பதில் அளித்தார். வாழ்க்கையில் நான் நினைத்து கூட பார்க்காதது எல்லாம் நடந்துவிட்டது. இனி எது நடந்தாலும் பார்த்துக் கொள்ளலாம் என்ற மனநிலையில் நான் தற்போது உள்ளேன் என்று சமந்தா விவாகரத்து குறித்து பேசினார்.
தற்போது சமந்தா சமீப காலமாக அதிகம் ஒல்லியாகி கோட் சூட் மற்றும் பெரிய கண்ணாடி உடன் தான் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார். இனி எவ்வளவு காலத்திற்கு இதே லுக்கில் இருப்பிங்க என ரசிகர் ஒருவர் கேட்டதற்கு பதில் அளித்த சமந்தா, கண்ணாடி தான் எனக்கு தற்போது கிடைத்திருக்கும் பெஸ்ட் பிரண்டு என கூறியுள்ளார். அந்தப் பதிவு தற்போது வைரலாகி வருகிறது.
https://twitter.com/Samanthaprabhu2/status/1645079008026189828
