“எப்போதும் உன்னை மறக்க முடியாது”…. 21 வருடங்கள் கழிந்தும் மறையாத துக்கம்… நடிகை சிம்ரனின் உருக்கமான பதிவு….!!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“எப்போதும் உன்னை மறக்க முடியாது”…. 21 வருடங்கள் கழிந்தும் மறையாத துக்கம்… நடிகை சிம்ரனின் உருக்கமான பதிவு….!!!!

Published

on

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களான விஜய், அஜித், சூர்யா, கமல் மற்றும் விக்ரம் போன்ற பல ஹீரோக்களுக்கும் ஜோடியாக நடித்து பிரபலமானவர் நடிகை சிம்ரன். 90 ஸ் கிட்ஸ்களின் கனவு கன்னியாக திகழ்ந்த இவருக்கு இன்றும் ஏராளமான ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது. தனது சிறுவயது நண்பரான தீபக் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பின்னர் சினிமா பக்கம் தலை திருப்பாத இவர் மீண்டும் படங்களில் நடிக்க தொடங்கி விட்டார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். கிட்டத்தட்ட 20 வருடங்களுக்குப் பிறகு மாதவன் நடிப்பில் உருவான “ராக்கெட்டரி நம்பி விளைவு” என்ற திரைப்படத்தில் மாஸ் என்று கொடுத்துள்ளார் சிம்ரன்.

Advertisement

இந்நிலையில் சிம்ரன் உடன் பிறந்தவர்களில் ஒருவர்தான் மோனல். அவர் தமிழில் பார்வை ஒன்றே போதுமே, பத்ரி மற்றும் சமுத்திரம் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார். ஹிந்தி மற்றும் கன்னடத்திலும் இவர் நடித்துள்ளார். நாயகியாக இவருக்கு நல்ல பட வாய்ப்புகள் இருந்த நேரத்தில் 2002 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அவரின் தற்கொலைக்கு காதல் தோல்விதான் காரணம் எனவும் கூறப்பட்டது. தற்போது தன் தங்கை தற்கொலை செய்து மரணம் அடைந்த நிகழ்வை நினைத்து சிம்ரன் உருக்கமாக மோனல் புகைப்படத்தை பகிர்ந்து உள்ளார். அதில் எப்போதும் உன்னை மறக்க முடியாது என அவர் பதிவிட்டுள்ள நிலையில் அந்த பதிவு தற்போது வைரல் ஆகிய வருகிறது.

Advertisement

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Advertisement

Simran Rishi Bagga இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@simranrishibagga)

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in