LATEST NEWS
ஜாலியாக விமானத்தில் கிளம்பிய பொன்னியின் செல்வன் படக்குழு…. இணையத்தை கலக்கும் புகைப்படங்கள்….!!!!
தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமானவர் நடிகை திரிஷா. இன்றளவும் நடிப்பிலும் சரி அழகிலும் சரி லட்சக்கணக்கான ரசிகர்களை கொள்ளை அடிப்பவர். இவருக்கு என தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது.
இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் இவர் ஏற்று நடித்த குந்தவை கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இதனிடையே பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் பிரம்மாண்ட வெற்றியை பெற்ற நிலையில் அதன் இரண்டாம் பாகம் வருகின்ற ஏப்ரல் 28ஆம் தேதி வெளியாக உள்ளது.
மணிரத்தினம் இயக்கியுள்ள இந்த திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது.
இதில் நடிகர் கார்த்தி, ஜெயம் ரவி மற்றும் திரிஷா என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.
படத்தின் ப்ரோமோஷன் பணிகள் ஒரு பக்கம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் நேற்று சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பொன்னியின் செல்வன் ஆந்தம் வெளியிட்ட விழாவில் கார்த்தி, விக்ரம், ஏ ஆர் ரகுமான், ஜெயம் ரவி, ஐஸ்வர்யா லட்சுமி மற்றும் திரிஷா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அந்த புகைப்படம் இணையத்தில் வைரலான நிலையில் இன்று முதல் பொன்னியின் செல்வன் படக்குழு வெளியூர் சுற்றுப்பயணத்தை தொடங்கியுள்ளது.
இன்று கோயம்புத்தூரில் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
இந்நிலையில் அதற்காக நடிகர்கள் கார்த்தி, விக்ரம் மற்றும் ஜெயம் ரவி ஆகியோரும் நடிகைகள் திரிஷா மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோரும் ஜாலியாக விமானத்தில் சென்று உள்ளனர்.
அப்போது விமான நிலையத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து உள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆகி வருகிறது.
