LATEST NEWS
“நள்ளிரவு திகில்” வீட்டின் மீது கற்கள், கம்பிகளுடன் மர்ம கும்பல் வெறித்தனமாக தாக்குதல்.. அலறிய குடும்பம், கண்டுகொள்ளாத போலீஸ்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!!
நாட்டின் தலைநகரான டெல்லியில் நள்ளிரவு நேரத்தில் நடந்த வன்முறை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மோகன் கார்டன், சாய் என்ஹ்லேவ் பகுதி (விகாஸ் புரி தொகுதி, ரன்ஹோலா காவல் நிலைய எல்லை) அருகே வசிக்கும் அபய் பிரதாப் சிங் என்பவரின் வீட்டை அடையாளம் தெரியாத கும்பல் ஒன்று நள்ளிரவில் திடீரெனத் தாக்கியது. முகத்தை மூடியும் திறந்தபடியும் வந்த அந்த மர்ம நபர்கள், தடி, இரும்பு கம்பி மற்றும் கற்களைக் கொண்டு சரமாரியாகத் தாக்குதலில் ஈடுபட்டனர்.
தாக்குதலின் போது வீட்டின் மின்சார மீட்டரை அடித்து நொறுக்கிய அந்த கும்பல், வாசலில் நிறுத்தப்பட்டிருந்த காரையும் கடுமையாகச் சேதப்படுத்தியது. வீட்டிற்குள் இருந்த குடும்பத்தினர் பயத்தில் அலறித் துடித்தபடி சத்தமிட்டும், தாக்குதல் நடத்தியவர்கள் சிறிதும் அஞ்சாமல் தங்களின் வன்முறையைத் தொடர்ந்தனர். இதனால் அப்பகுதி முழுவதுமே நள்ளிரவில் பெரும் அச்சமும் பதற்றமும் சூழ்ந்தது.
சம்பவம் நடந்த உடனேயே காவல் துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்ட போதிலும், அவர்கள் சம்பவ இடத்திற்கு உடனடியாக வரவில்லை என்றும், இதுவரை அந்த மர்ம நபர்களை அடையாளம் காண நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தலைநகரிலேயே நள்ளிரவில் நடந்த இந்த துணிச்சலான தாக்குதல் சம்பவம் அப்பகுதி மக்களிடையே கடும் அதிர்ச்சியையும் பாதுகாப்பற்ற உணர்வையும் ஏற்படுத்தியுள்ளது.
