LATEST NEWS
“இது என் குரலே இல்ல… என்னோட செல்போனைத் திருடி இப்படி பண்ணிட்டாங்க..” டீச்சர் டிரான்ஸ்பர் லஞ்சப் புகார்..! ஜாகீர் உசேன் கொடுத்த பகீர் விளக்கம்..!!
அன்பில் மகேஷ் பொய்யாமொழியிடம் ஆசிரியர் இடமாற்றத்திற்காக ரூ.7 லட்சம் லஞ்சம் கொடுத்ததாக திமுக நிர்வாகி ஜாகீர் உசேன் பேசியதாகக் கூறப்படும் ஆடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது அந்த விவகாரத்தில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள ஜாகீர் உசேன், பரவிவரும் அந்த ஆடியோ பதிவில் இருப்பது தனது குரல் அல்ல என்றும், நேற்று இரவு தனது செல்போன் சிறிது நேரம் காணாமல் போனபோது இந்தச் சதி நடந்திருக்கலாம் என்றும் குறிப்பிட்டு ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.
இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் தீயாகப் பரவி விவாதப் பொருளாகியுள்ள நிலையில், இதன் உண்மைத் தன்மையை கண்டறியக் கோரி காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்த வேண்டும் என்று பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். முறைகேடு குற்றச்சாட்டுக்கும், தொழில்நுட்பத் திருட்டு அல்லது போலி ஆடியோவுக்கும் இடையிலான இந்தச் சர்ச்சையின் பின்னணி என்ன என்பது போலீசாரின் முறையான விசாரணையில்தான் வெளிச்சத்திற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
