“என்னை உடனடியாக கல்யாணம் பண்ணலனா..” அதிகாலை 2:30 மணிக்கு வந்த வீடியோ கால்.. கார் பயணத்தில் காதலன் பார்த்த கொடூரம்.. காதலியின் விபரீத முடிவு.. நெஞ்சை உலுக்கும் பின்னணி..!! – cinefeeds
Connect with us

CRIME

“என்னை உடனடியாக கல்யாணம் பண்ணலனா..” அதிகாலை 2:30 மணிக்கு வந்த வீடியோ கால்.. கார் பயணத்தில் காதலன் பார்த்த கொடூரம்.. காதலியின் விபரீத முடிவு.. நெஞ்சை உலுக்கும் பின்னணி..!!

Published

on

ஹைதராபாத்தின் மாதப்பூரில் உள்ள மென்பொருள் நிறுவன ஊழியர் அர்ச்சனா சௌத்ரி தற்கொலை செய்துகொண்ட வழக்கில், அவரது காதலன் பண்டாரி விமல் போலீசாரிடம் அளித்துள்ள வாக்குமூலம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று அதிகாலை 2:30 மணியளவில் அர்ச்சனா தனக்கு வாட்ஸ்அப் வீடியோ கால் செய்ததாக விமல் தெரிவித்துள்ளார். தனது தாயாருடன் ஒரு சுப நிகழ்ச்சி உத்தியோகமாகச் செரியல் பகுதிக்குத் தான் காரில் பயணித்துக் கொண்டிருந்தபோது வந்த அந்த வீடியோ காலில், அர்ச்சனா தனது வீட்டு மின்விசிறியில் புடவையைக் கட்டி தூக்கு மாட்டித் தொங்குவது போல் காட்டியுள்ளார். மேலும், “நீ என்னை உடனடியாகத் திருமணம் செய்யவில்லை என்றால், நான் இதிலேயே தூக்குப்போட்டுத் தற்கொலை செய்துகொள்வேன்” என மிரட்டிவிட்டு, உடனடியாகத் தொடர்பைத் துண்டித்துள்ளார். அதன் பிறகு விமல் பலமுறை அலைபேசியில் அழைத்தும் அர்ச்சனா பதிலளிக்கவில்லை.

இதனால் கடும் பீதியடைந்த விமல், அதிகாலை 5:30 மணியளவில் அர்ச்சனாவின் வீட்டிற்கு விரைந்து வந்துள்ளார். வீட்டின் கதவு உட்புறமாகப் பூட்டப்பட்டிருந்ததால், உடனடியாக போலீசாருக்குத் தகவல் கொடுத்துள்ளார். சம்பவ இடத்திற்கு வந்த மாதப்பூர் போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, அர்ச்சனா மின்விசிறியில் பிணமாகத் தூங்கிக் கொண்டிருப்பது கண்டறியப்பட்டது. விமலுக்கும் அர்ச்சனாவுக்கும் இடையே கடந்த சில காலமாகவே காதல் உறவு நீடித்து வந்த நிலையில், விமல் ஏற்கனவே திருமணமானவர் என்பதும், அர்ச்சனாவைத் திருமணம் செய்வதற்காகத் தனது தற்போதைய மனைவியை விவாகரத்து செய்ய அவர் சட்டப்பூர்வமாக முயன்று வந்ததும் போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் அம்பலமாகியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in