CRIME
“அய்யயோ.. நள்ளிரவில் கேட்ட சத்தம்..” ஜன்னல் வழியே கூரைக்குத் தப்பிய பெண்.. கையில் ஆயுதத்துடன் பின்தொடர்ந்த சைக்கோ.. இறுதியில் நடந்த ட்விஸ்ட்.. இணையத்தை உலுக்கும் வீடியோ..!1
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் வசிக்கும் மிலோரா (29) என்ற பெண், தனது வீட்டில் நள்ளிரவில் உறங்கிக் கொண்டிருந்தபோது விசித்திரமான சத்தம் கேட்டு ஜன்னல் வழியே பார்த்துள்ளார். அப்போது கிறிஸ்டியன் ஹிக்ஸ் என்ற நபர் கையில் ஆயுதத்துடன் வீட்டிற்குள் நுழைய முயல்வதைக் கண்டு அதிர்ச்சியடைந்து, தப்பிக்க வழியின்றி இரண்டாவது மாடி ஜன்னல் வழியாக வீட்டின் கூரைக்குச் சென்று மறைந்துள்ளார். எனினும், அந்த நபர் மிலோராவைத் தேடிக்கொண்டே கூரை வரை பின்தொடர்ந்துள்ளார். கூரையின் விளிம்பில் பயந்து நடுங்கியபடி ஒளிந்திருந்த மிலோரா, காவல்துறையை அழைத்ததோடு, கையில் ஆயுதத்துடன் தன்னைத் தேடி வரும் அந்த நபரைத் தனது தொலைபேசியில் புகைப்படம் எடுத்துள்ளார். இந்தத் திகிலூட்டும் புகைப்படம் பின்னர் உலகளவில் வைரலானது. இறுதியில், காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு வீரர்களின் உதவியுடன் மிலோரா பாதுகாப்பாக மீட்கப்பட்டு, அந்த நபர் கைது செய்யப்பட்டார்.
இந்தச் சம்பவத்தின் பின்னணியில் உள்ள அமெரிக்க நீதித்துறையின் மாபெரும் தோல்விதான் ஒட்டுமொத்த சமூகத்தையும் உலுக்கியுள்ளது. ஏனெனில், மிலோராவின் வீட்டிற்குள் நுழைவதற்குச் சில மணி நேரங்களுக்கு முன்புதான், மற்றொரு வீட்டின் கொல்லைப்புறத்தில் அத்துமீறி நுழைந்ததற்காக இந்த நபரைப் போலீஸார் பிடித்துப் பின்னர் விடுவித்துள்ளனர்; அங்கிருந்து தப்பிய சில நிமிடங்களிலேயே அவர் மிலோராவை வேட்டையாட வந்துள்ளார். இந்த வழக்கில் 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்று விடுதலையான அவர், 2018-ல் கொள்ளை மற்றும் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகளுக்காக ஓராண்டுக்கும் குறைவாகவே சிறையில் அடைக்கப்பட்டார். தொடர்ந்து குற்றங்களில் ஈடுபட்டு வந்த அவர், 2021-ல் ஆட்கடத்தல் மற்றும் பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகளில் சிக்கி, இறுதியாக 2023-ல்தான் 37 ஆண்டுகள் கடுமையான சிறைத்தண்டனையைப் பெற்றார். ஆரம்பத்திலேயே இந்த ஆபத்தான குற்றவாளியை முறைப்படி தண்டித்து முடக்கத் தவறிய அந்நாட்டு சட்ட அமைப்பின் சீர்குலைவை இச்சம்பவம் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.
