“இது என்ன கொடுமை.. திருமணமாகி மூன்றே மாதம்..” சாஃப்ட்வேர் இன்ஜினியர் எடுத்த விபரீத முடிவு.. பின்னணியில் இருக்கும் ஆன்லைன் பயங்கரம்..!! – cinefeeds
Connect with us

CRIME

“இது என்ன கொடுமை.. திருமணமாகி மூன்றே மாதம்..” சாஃப்ட்வேர் இன்ஜினியர் எடுத்த விபரீத முடிவு.. பின்னணியில் இருக்கும் ஆன்லைன் பயங்கரம்..!!

Published

on

ஹைதராபாத் சைதன்யபுரியில் ஆன்லைன் பந்தய செயலிகளால் பணத்தை இழந்த 34 வயது மென்பொருள் பொறியாளர் தம்மிசெட்டி பிரவீன் தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. மென்பொருள் பொறியாளராகப் பணியாற்றி வந்த பிரவீன், சமீபகாலமாகப் பல்வேறு பந்தய செயலிகளில் ஆர்வம் காட்டி, அதில் பெருமளவில் பணத்தை முதலீடு செய்துள்ளார். ஆனால், அந்த விளையாட்டுகளில் அவருக்குத் தொடர்ச்சியாக கடுமையான நிதி இழப்புகள் ஏற்பட்டுள்ளன. இதனால் வாங்கிய கடன்களைத் திருப்பிக் செலுத்த முடியாமலும், பொருளாதார ரீதியாக மீள முடியாமலும் அவர் தவித்து வந்துள்ளார்.

இந்த ஆன்லைன் சூதாட்ட இழப்பால் ஏற்பட்ட கடன் சுமை ஒருபுறமிருக்க, தனது குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் இதனால் கடுமையான அவமானம் ஏற்படும் என்ற அச்சமே அவரது இந்த விபரீத முடிவுக்குக் காரணமாக அமைந்துள்ளது. குறிப்பாக, கடந்த மூன்று மாதங்களுக்கு முன்புதான் பிரவீனுக்கு மிக விமரிசையாகத் திருமணம் நடந்து முடிந்துள்ளது. திருமணமான சில மாதங்களிலேயே, இந்த நிதியிழப்பு மற்றும் குடும்பத்தினர் எதிர்கொள்ளவிருக்கும் சமூக அவமானத்தைத் தாங்கிக் கொள்ள முடியாமல் அவர் தனது உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், ஆன்லைன் பந்தய செயலிகளின் ஆபத்து குறித்த விழிப்புணர்வின் அவசியத்தையும் மீண்டும் ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in