LATEST NEWS
“அய்யயோ காப்பாத்துங்க” உயிருக்குப் போராடி அலறிய இளம்பெண்: அரசு மருத்துவமனையில் காலியாகக் கிடந்த ஆக்சிஜன் சிலிண்டர்கள்.. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!
உத்தரப் பிரதேச மாநிலம் பல்லியாவில் உள்ள அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் சிலிண்டர்கள் காலியாக இருந்ததால், மூச்சுவிட முடியாமல் படுக்கையில் துடித்த இளம் பெண்ணுக்கு உரிய நேரத்தில் ஆக்சிஜன் வழங்க முடியாமல் போன அவலம் அரங்கேறியுள்ளது . மருத்துவமனை படுக்கையில் அந்தப் பெண் வலியால் அலறித் துடித்த நிலையில், அவருக்கு உடனடியாக ஆக்சிஜன் செலுத்த வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தினர் .
ஆனால், அந்தப் பிரிவில் இருந்த ஆக்சிஜன் சிலிண்டர்கள் அனைத்தும் முற்றிலும் காலியாகக் கிடந்ததால் , நோயாளியின் உயிரைக் காக்க வேண்டிய அவசர நேரத்தில் ஒரு சொட்டு ஆக்சிஜன் கூட கிடைக்காத பெரும் அவலநிலை ஏற்பட்டது . மருத்துவமனையின் ஆக்சிஜன் உற்பத்தி ஆலையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாகவே இந்தத் தட்டுப்பாடு ஏற்பட்டதாகத் தெரியவந்துள்ளது .
தங்கள் கண் முன்னே உயிருக்குப் போராடும் பெண்ணைக் காப்பாற்ற முடியாமல் மருத்துவர்களும், அவரோடு வந்த குடும்பத்தினரும் செய்வதறியாது திகைத்து, மிகுந்த மனவேதனைக்கு ஆளாகினர் . அரசு மருத்துவமனையின் இந்த அலட்சியப் போக்கும், அடிப்படை மருத்துவ வசதிப் பற்றாக்குறையும் நோயாளிகளின் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கியுள்ள நிலையில், இச்சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
