தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர்தான் நடிகர் கிஷோர்.

இவர் தனுஷ் நடிப்பில் வெளியான ஆடுகளம் மற்றும் ரஜினி நடிப்பில் வெளியான கபாலி உள்ளிட்ட பல தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

தமிழ் மட்டுமல்லாமல் கன்னடம் மற்றும் தெலுங்கிலும் புகழ்பெற்ற நடிகராக திகழ்ந்து கொண்டிருக்கிறார்.

இவர் சினிமாவில் நடிப்பதில் பிஸியாக இருந்து வந்தாலும் இயற்கை விவசாயத்தின் மீது அதிக ஆர்வம் கொண்டவர்.

அதனால் நடிப்புக்கு இடையே தனது மனைவி விஷாலாவுடன் இணைந்து இயற்கை விவசாயமும் செய்து வருகின்றார்.

இவர் தங்களின் வீட்டுக்கு தேவையான உணவை தாங்களே உற்பத்தி செய்து கொள்வது மற்றும் குழந்தைகளுக்கும் விவசாயம் மற்றும் வீட்டு வேலைகளை கற்றுத் தருவது, ஆடம்பரம் இல்லாத முழுமையான இயற்கை வாழ்வியல் முறை என இவரின் வாழ்க்கை கண்களை மட்டும் அல்லாமல் மனதையும் குளிர வைக்கின்றது.

பொதுவாக சினிமா பிரபலங்கள் என்றாலே ஆடம்பரம் என்று தான் பலரும் அறிந்திருப்போம்.

ஆனால் இவரிடம் ஆடம்பரங்களின் எந்த ஒரு அறிவுரையும் இல்லை.

குறிப்பாக கொரோனா ஊரடங்கு காலத்தில் விவசாய அனுபவங்களை கேட்டதற்கு முன்பு ஒரு சிறிய பிளாஷ்பேக் அவர் கூறியிருந்தார்.

அதாவது கர்நாடக மாநிலத்தில் உள்ள ஒரு கல்லூரியில் இவரும் அவரின் மனைவியும் பிஎஸ்சி விலங்கியல் படித்துள்ளனர்.

தனது மனைவிக்கு கிஷோர் சீனியர். கல்லூரி தியேட்டர் நாடகங்களில் இருவரும் இணைந்து நடித்த போது ஏற்பட்ட பழக்கம் தான் நாளடைவில் காதலாக மாறியது.

அதன் பிறகு இருவரும் திருமணம் செய்து கொண்ட நிலையில் இவர்களுக்கு திருமணம் முடிந்து கிட்டத்தட்ட 23 வருடங்கள் நிறைவடைந்து விட்டது.

இவர்கள் இருவரும் ஒன்றாக இணைந்து விவசாயத்தை செய்து கொண்டு தங்களின் இரண்டு பிள்ளைகளையும் பார்த்துக் கொண்டு வருகிறார்கள்.

கடந்த 2009 ஆம் ஆண்டு சொந்த நிலத்தை வாங்கிய இவர்கள் படிப்படியாக விவசாயத்தில் களமிறங்கினர்.

விவசாய வாழ்க்கை முறையை லாப நோக்கத்தில் கொண்டு போகாமல் பொருளாதார தேவைக்காக சினிமாவில் நடித்துக் கொண்டு மனைவி விவசாய வேலைகளை பார்த்து வருவதாக கிஷோர் தெரிவித்துள்ளார்.

படபிடிப்பு இல்லாத சமயங்களில் கிஷோரும் சேர்ந்து விவசாய வேலைகளை பார்த்து வருகிறார்.இவரின் தலையை செயல் பலரின் பாராட்டுக்களை பெற்று வருகிறது. தற்போது இவரின் விவசாயம் தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.