தமிழ் சினிமாவில் 80-90 களில் ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ரோஜா.
தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் கன்னட முள்ளிட்ட பல மொழிகளிலும் இவர் நடித்துள்ளார்.
இவர் நடித்த பெரும்பாலான படங்கள் ரசிகர்கள் மத்தியில் ஹிட் கொடுத்தன.
இளைஞர்களின் கனவு கன்னியாக வலம் வந்த ரோஜா இயக்குனர் செல்வமணியை திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்திற்குப் பிறகு பட வாய்ப்புகள் குறைந்த நிலையில் சின்ன திரையில் கவனம் செலுத்த ஆரம்பித்தார்.
அதன் பிறகு ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய் ஆர் எஸ் கட்சியில் இணைந்தார்.
அங்கு ரோஜாவுக்கு விளையாட்டு மட்டும் மேம்பாட்டு துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது.
ஒரு பக்கம் நடிகையாகவும் மறுபக்கம் அரசியல் பிரபலமாகவும் விளங்கி கொண்டிருக்கிறார்.
ரோஜாவின் மகள் மற்றும் அன்ஷு மாலிகா திரைப்படத்தில் நடிக்க உள்ளதாக கோலிவுட் வட்டாரத்தில் தகவல் வெளியானது.
இவரை நடிக்க வைக்க சில டோலிவுட் இயக்குனர்கள் அனுப்பியதாக கூறப்பட்ட நிலையில் தன்னுடைய மகளை நடிகையாக ரோஜா மற்றும் செல்வமணி ஆகியோர் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
ரோஜாவின் மகள் தற்போது அமெரிக்காவில் உள்ள பிரபல திரைப்படக் கல்லூரியில் நடிப்பு, இயக்கம், திரைக்கதை எழுதுதல் ஆகியவை பற்றி படித்து வருகின்றார்.
படிப்பை முடித்ததும் இந்தியா திரும்பிய பிறகு நடிப்பில் கவனம் செலுத்துவார் என்று கூறப்படுகின்றது.
அது மட்டுமல்லாமல் ரோஜா நடிகை என்பதாலும் அவரின் கணவர் செல்வமணி இயக்குனர் என்பதாலும் தனது மகளுக்கு வேண்டிய அனைத்து பயிற்சிகளையும் அவர்களே கற்பித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
ரோஜாவின் மகள் பாலிவுட் மற்றும் கோலிவுட் திரை உலகில் அறிமுகமானால் திறமையான நடிகையாக ஒரு ரவுண்டு வருவார் என கூறப்படுகிறது.
இருந்தாலும் இது குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பை ரோஜா மற்றும் செல்வமணி யாரும் வெளியிடவில்லை.
இந்நிலையில் ஹீரோயினி போல இருக்கும் ரோஜா மகளின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.