தமிழக முதல்வர் ஸ்டாலினின் 70வது பிறந்த நாள் சிறப்பு நிகழ்ச்சி ஆக எங்கள் முதல்வர் எங்கள் பெருமை என்ற புகைப்பட கண்காட்சி ராஜா அண்ணாமலை மன்றத்தில் தொடர்ந்து சில நாட்களாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இந்த கண்காட்சியை பலரும் பார்வையிட்டு வருகிறார்கள். அதில் ஸ்பெஷல் என்னவென்றால் அங்கு மிசாவின்போது சிறையில் ஸ்டாலின் இருந்த காட்சியை அப்படியே தத்ரூபமாக வடிவமைத்துள்ளனர்.

அந்த சிறைக்குள் சென்று பார்த்த ஸ்டாலின் அங்கு அமைக்கப்பட்டிருந்த திண்ணையில் சற்று நேரம் அமர்ந்து பழைய நினைவுகளில் மூழ்கிப் போனார். அந்த கண்காட்சியில் அவரின் தந்தை கருணாநிதி மருத்துவமனையில் இருந்த கடைசி நிமிடங்கள் புகைப்படங்களாக வைக்கப்பட்டுள்ளது.

இந்த கண்காட்சி தற்போது விடுமுறை தினங்களை முன்னிட்டு வேகம் எடுத்துள்ளது. அங்க அமைக்கப்பட்டுள்ள ஸ்டாலின் போட்டோ சிலை அருகே நின்று பலரும் செல்பி எடுத்து வருகிறார்கள்.

இந்நிலையில் இந்த கண்காட்சியை நடிகர் ரஜினி நேரில் சென்று பார்வையிட்டார்.

அதன் பிறகு பேசிய ரஜினி, எனது நண்பர் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினின் வாழ்க்கை பயணமும் அரசியல் பயணமும் ஏறக்குறைய ஒன்றுதான். கிட்டத்தட்ட 55 வருடமாக அரசியலில் உள்ளார்.

படிப்படியாக கட்சியில் முன்னேறி வந்துள்ளார். பல பதவிகளை வகித்து விட்டு தற்போது முதலமைச்சராக உள்ளார்.

இது அவரின் உழைப்புக்கு மக்கள் கொடுத்த அங்கீகாரம் தான். அவர் நீண்ட நாள் உடல் ஆரோக்கியத்துடன் வாழ்ந்து மக்கள் சேவை செய்ய வேண்டும் என்று ரஜினி கூறினார்.

இதனைத் தொடர்ந்து கண்காட்சியை பார்வையிட்ட நடிகர் ரஜினியின் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

நடிகர் ரஜினியின் நெல்சன் இயக்கத்தில் தற்போது ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.