தமிழ் சினிமாவில் இன்றளவும் முன்னணி நடிகராக திகழ்வர் பாக்கியராஜ்.

அவர் நடித்த முந்தானை முடிச்சு திரைப்படம் அவரின் வாழ்க்கையில் மிகப் பெரிய திருப்புமுனையாக அமைந்தது.

ரசிகர்கள் அந்தப் படம் மிகப்பெரிய ஹிட் கொடுத்ததால் அடுத்தடுத்து இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்தன.

இவரின் படங்களுக்கு பெண் ரசிகர்களின் வரவேற்பு எப்போதும் அதிக அளவில் இருக்கும்.

இவர் நடிகராக மட்டுமல்லாமல் இயக்குனர், எழுத்தாளர்,இசையமைப்பாளர் மற்றும் தயாரிப்பாளர் என பன்முகம் கொண்ட கலைஞராக வலம் வருகிறார்.

இவர் முதன்முதலாக பிரவீனா என்பவரை கடந்த 1981 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

ஆனால் உடல் நல குறைவு காரணமாக அவர் திடீரென உயிரிழந்ததால் 1984 ஆம் ஆண்டு நடிகை பூர்ணிமாவை இவர் திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு சாந்தனு என்ற ஒரு மகன் உள்ளார்.

அவரும் தற்போது திரைப்படங்களில் தான் நடித்து வருகிறார்.

தன் அப்பாவை போலவே சாந்தனவும் திரைத்துறையில் காலடி எடுத்து வைத்துள்ளார்.

இந்நிலையில் பாக்கியராஜ் மற்றும் பூர்ணிமா குடும்பத்துடன் பழனியில் சுவாமி தரிசனம் செய்த நிலையில் அது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.