தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜய்.

இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான வாரிசு திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த திரைப்படம் முழுக்க முழுக்க குடும்ப கதையை மையமாகக் கொண்டிருந்ததால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

இந்த திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது தளபதி 67 திரைப்படத்தில் விஜய் நடித்து வருகிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கம் இந்த திரைப்படத்திற்கு லியோ என பெயரிடப்பட்டுள்ளது.

இந்த திரைப்படத்தில் பல வருடங்களுக்குப் பிறகு இசையுடன் திரிஷா இணைந்துள்ளார்.

படத்தின் சூட்டிங் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கோலிவுட்டின் முன்னணி நட்சத்திரங்கள் மற்றும் இயக்குனர்கள் நடித்து வரும் இந்த திரைப்படம் பற்றிய செய்தி தற்போது இணையத்தில் அதிகமாக வைரலாகி வருகிறது.

தற்போது காஷ்மீரில் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கிட்டத்தட்ட 500 பேருக்கு மேல் கலந்து கொண்ட இந்த படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் அனைத்தும் ஏற்கனவே வைரல் ஆனது.

அதிலும் குறிப்பாக விஜய் உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரும் நெருப்பை மூட்டி குளிர்காய்வது போல புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் அதிகமாக வைரலானது.

இதனைத் தொடர்ந்து தற்போது லியோ திரைப்படத்தில் விஜயின் லுக் எப்படி உள்ளது என்பதை குறித்த புகைப்படங்கள் வைரல் ஆகி வருகிறது.

அந்த புகைப்படங்களை விஜய் ரசிகர்கள் அதிக அளவில் இணையத்தில் பகிர்ந்து வருகிறார்கள்.

அந்த புகைப்படத்தில் விஜய் சற்று உடல் இடைத்தது போல காணப்படுகிறார். இந்த படத்திற்கான தோற்றமா அல்லது காஷ்மீர் குளிர் அவரை வாட்டி எடுக்கிறதா என்று பல பேச்சுகளும் கிளம்பியுள்ளது.

இருந்தாலும் விஜய்யின் புதிய லுக் செம்ம மாஸாக உள்ளது. இதுவே படத்தின் அடுத்தடுத்த அப்டேட்டை எதிர்பார்க்க வைத்துள்ளது. தற்போது இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.