LATEST NEWS
இன்று “உலக இன்ஜினியர் தினம்”.. தமிழ் சினிமா நடிகர்கள் யார் யார் இன்ஜினியரிங் முடித்துள்ளார்கள் தெரியுமா?.. இதோ சிறப்பு தொகுப்பு..!!

தென்னிந்திய சினிமா அளவில் தற்போது முன்னணி நடிகர் நடிகைகளாக ஜொலித்துக் கொண்டிருக்கும் பிரபலங்கள் ஏராளம். பொதுவாகவே நடிகர் நடிகைகள் சினிமாவில் நுழைவதற்கு முன்பு ஏதாவது ஒரு படிப்பை படித்துவிட்டு ஒரு துறையில் பணியாற்றிய பிறகுதான் சினிமாவில் நுழைந்து இருப்பார்கள். அப்படி பொறியியல் படித்துவிட்டு கோலிவுட்டில் கலக்கி கொண்டிருக்கும் பிரபலங்கள் ஏராளம். இன்று இன்ஜினியரிங் தினம் கொண்டாடப்படும் நிலையில் இன்ஜினியரிங் படித்து விட்ட தமிழ் சினிமாவில் கலக்கும் நடிகர்கள் யார் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
சிவகார்த்திகேயன்:
நகைச்சுவை மூலம் தனது திரை பயணத்தை தொடங்கிய சிவகார்த்திகேயன் தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக ஜொலித்துக் கொண்டிருக்கிறார். மிமிக்ரி செய்வதில் இவரை அடித்துக் கொள்ள ஆளே கிடையாது. இவர் ஜேஜே பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பட்டப் படிப்பை முடித்தவர்.
கௌதம் மேனன்:
தற்போது சினிமாவில் பிரபல எழுத்தாளர் மற்றும் இயக்குனராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் கௌதம் மேனன். இவர் இயக்கிய பெரும்பாலான திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்துள்ளன. இவர் மூகாம்பிகை பொறியியல் கல்லூரியில் படித்து அங்கேயே மெக்கானிக்கல் இன்ஜினியரிங் முடித்தார்.
நடிகர் பிரசன்னா:
கோலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக திகழும் பிரசன்னா தற்போது ஒரு சில திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவர் நடிகை சினேகாவை திருமணம் செய்து கொண்ட நிலையில் இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். பிரசன்னா சாரநாதன் பொறியியல் கல்லூரியில் EEE பட்டம் பெற்றவர்.
நடிகர் கார்த்தி:
சிவகுமாரின் இளைய மகனும் நடிகர் சூர்யாவின் உடன் பிறந்த தம்பியுமான நடிகர் கார்த்தி தற்போது தமிழ் சினிமாவின் உச்சத்திற்கு சென்று விட்டார். சமீபத்தில் வெளியான பொன்னியின் செல்வன் 2 திரைப்படத்தில் இவரின் நடிப்பு ரசிகர்கள் மத்தியில் வெகுவாக பாராட்டப்பட்டது. அமெரிக்காவில் மேற்படிப்பு படித்த இவர் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் இளங்கலை மற்றும் தொழில்துறை பொறியியலில் முதுகலை பட்டம் பெற்றுள்ளார்.
நடிகர் மாதவன்:
மெக்கானிக்கல் இன்ஜினியரிங் இளங்கலை பட்டம் பெற்ற பெருமைக்குரிய மாதவன் ஐஐடி மெட்ராஸில் படிப்பை முடித்தார். மாதவன் ஆரம்பத்தில் தொலைக்காட்சி விளம்பரத்தில் நடித்துக் கொண்டிருந்தார். அதுவே அவரை சினிமாவில் நுழையத் தூண்டியது. மணிரத்னத்தின் ‘அலைபாயுதே’ படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான மாதவன் காதல் நாடகத்தில் சாப்ட்வேர் இன்ஜினியராக நடித்தார்.