LATEST NEWS
ஹீரோ விஷால் தான், ஆனா எஸ்.ஜே சூர்யா வேற லெவல்.. மார்க் ஆண்டனி திரைப்படம் எப்படி இருக்கு..??

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஷால். செல்லமே திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நுழைந்த இவர் தற்போது முன்னணி நடிகர்களின் பட்டியலில் இடம் பிடித்துள்ளார். இவர் தற்போது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் மார்க் ஆண்டனி திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் உலகம் முழுவதும் இன்று வெளியாகி உள்ள நிலையில் விஷால் மற்றும் எஸ் ஜே சூர்யா இரண்டு வேடங்களில் நடித்துள்ளனர். ஃபார் இந்தியா முறையில் வெளியாகி இருக்கும் இந்த திரைப்படத்தை மினி ஸ்டுடியோ சார்பில் வினோத்குமார் தயாரித்துள்ளார்.
ஜிவி பிரகாஷ் இசை அமைத்திருக்கும் இந்த திரைப்படம் இன்று வெளியாகி உள்ள நிலையில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த நிலையில் மார்கண்டனி திரைப்படம் எப்படி உள்ளது என்பது குறித்த ரிவ்யூ வெளியாகி உள்ளது. அதாவது சயின்ஸ் பிக்சன் மற்றும் டைம் ட்ராவல் கதையை இந்த படம் கொண்டுள்ளது. அனைவருக்கும் புரியும்படி ஆதிக் இந்த திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
விஷாலும் எஸ்.கே. சூர்யாவும் இந்த படத்தில் டூயல் ரோல் பண்ணி உள்ளனர். சுனில், செல்வராகவன் மற்றும் அபிநயா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். கதைப்படி 1975 ஆம் ஆண்டில் படத்தில் விஷாலின் அப்பா ஆண்டனி கேங்ஸ்டார். 90களில் மெக்கானிக்காக இருக்கும் அவரது மகன் மார்க் கேங்ஸ்டார். அதனைப் போலவே எஸ் ஜே சூர்யா 75 ல் ஜாக்கி பாண்டியன் என்கிற டான்.
90 இல் அவர் மகன் மதன்பாண்டியன் கேங்ஸ்டர். இவங்க கதை டைம் ட்ராவல் ஓட எப்படி போகும் என்கிறது தான் திரைக்கதை. படம் பக்காவான என்டர்டைன்மென்ட் ஆக உள்ளதாக கூறப்படுகிறது. அதே சமயம் விஷால் ஹீரோவாக இருந்தாலும் எஸ்.ஜே சூர்யாவின் கதாபாத்திரம் படத்தில் அனைவராலும் ரசிக்கப்படும் வகையில் உள்ளதாகவும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.