தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வளம் வந்தவர் தான் நடிகை பூமிகா. இவர் தென்னிந்தியாவின் முன்னணி ஹீரோக்கள் பலருடன் இணைந்து நடித்துள்ளார்.

விஜய் நடித்த பத்ரி மற்றும் ரோஜா கூட்டம் உள்ளிட்ட படங்களில் கதாநாயகியாக நடித்தவர். டெல்லியை சேர்ந்த இவர் நடிகையாக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் திகழ்ந்து வருகிறார்.

இவர் கடந்த 2000-ம் ஆண்டு வெளியான யுவகுடு என்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.

அடுத்து தமிழில் விஜய் நடிப்பில் வெளியான பத்ரி திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அடுத்தடுத்து இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்தன. சூர்யாவுடன் ஜில்லுனு ஒரு காதல் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பட்டி தொட்டி எல்லாம் பிரபலமானார்.

இவர் தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாள மற்றும் இந்தி உள்ளிட்ட பழமொழி படங்களிலும் நடித்து வருகிறார். இதனிடையே இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் பூமிகா அடிக்கடி தனது க்யூட்டான புகைப்படங்களை இணையத்தில் பகிர்வது வழக்கம்.

அவ்வகையில் தற்போது கிளாமர் லுக்கில் ரசிகர்களை மயக்கும் புகைப்படங்களை அவர் வெளியிட்டுள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.