தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித் நடிப்பில் சமீபத்தில் வெளியான துணிவு திரைப்படத்தில் சார் பட்டா பரம்பரை படத்தின் புகழ் ஜான் கொகன் முக்கிய நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இவரின் மனைவி பிரபல நடிகை பூஜா ராமச்சந்திரன். இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

சின்னத்திரையில் தொகுப்பாளராக இருந்து அதன் பிறகு தமிழில் குணச்சித்திர வேடங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்தான் நடிகை பூஜா ராமச்சந்திரன்.

இவரின் முதல் திருமணம் விவாகரத்தில் முடிவடைந்தது. அதனைத் தொடர்ந்து இரண்டாவதாக தன்னுடைய நீண்ட நாள் நண்பர் மற்றும் மலையாள நடிகரான ஜான் கோகென் என்பவரை இரண்டாவதாக மறுமணம் செய்து கொண்டார்.

இவர்கள் இருவருமே ஃபிட்னஸ் மீது அதிக ஆர்வம் கொண்ட ஜோடி என்பதால் திருமணத்திற்கு பிறகும் உடற்பயிற்சி மற்றும் யோகா செய்து பல புகைப்படங்களை தொடர்ந்து பதிவிட்டு வருகிறார்கள்.

பூஜா ராமச்சந்திரன் சமீபத்தில் கர்ப்பமாக இருக்கும் தகவலை வெளியிட்டிருந்தார்.

கர்ப்பமாக இருக்கும் நேரத்திலும் குழந்தையின் ஆரோக்கியத்திற்கு ஏற்றவாறு உடற்பயிற்சிகளை செய்து அந்த வீடியோக்களை இணையத்தில் பகிர்ந்தார்.

அந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் கர்ப்பமாக இருக்கும் நேரத்தில் இப்படி செய்வது நல்லதா என கேள்வி கேட்டனர்.

இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர்கள் இருவரும் ஜாலியாக சைக்கிளிங் போவது, மலையேறுவது, நீச்சல் குளத்தில் ஆட்டம்போடுவது என ஜாலியாக பொழுதை கழித்து வருவார்கள்.

கடந்த மாதம் தான் பூஜாவுக்கு மிக பிரம்மாண்டமாக வளைகாப்பு நடந்து முடிந்தது.

அது தொடர்பான புகைப்படங்களும் இணையத்தில் வைரலாளர் நிலையில் பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.

குழந்தை பிறப்பதற்கு இன்னும் சில நாட்களே இருக்கும்போது தனது காதல் கணவருடன் வீக் கெண்டை ஜாலியாக கடற்கரை ரெஸ்டாரண்டில் கழித்துள்ளார்.

அதாவது தனது கணவரின் பிறந்த நாளை முன்னிட்டு அவர் வெளியில் சென்று உள்ளார்.

அது தொடர்பான புகைப்படங்களை பூஜா ராமச்சந்திரன் பகிர்ந்து உள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.