மகளின் பிறந்தநாளை வேற லெவலில் கொண்டாடிய நடிகை குஷ்பு…. வைரலாகும் அழகிய புகைப்படங்கள்….!!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

மகளின் பிறந்தநாளை வேற லெவலில் கொண்டாடிய நடிகை குஷ்பு…. வைரலாகும் அழகிய புகைப்படங்கள்….!!!!

Published

on

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக 80 மற்றும் 90களில் கொடி கட்டி பறந்தவர் தான் நடிகை குஷ்பூ. இவர் தென்னிந்திய மொழிகளை தாண்டி இந்தியிலும் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். வருஷம் 16, சின்னத்தம்பி, சிங்காரவேலன் மற்றும் அண்ணாமலை உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் தமிழ் திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார். சமீப காலமாக இவர் அதிக அளவு படங்களில் நடிப்பதில்லை. இவர் இறுதியாக வாரிசு திரைப்படத்தில் நடித்ததாக கூறப்பட்ட நிலையில் இவர் நடித்த காட்சிகள் எதுவும் வெளியாகவில்லை.

இதனிடையே நடிகை குஷ்பூ இயக்குனர் சுந்தர் சியை திருமணம் செய்து கொண்ட நிலையில் இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளன. தற்போது நடிகை குஷ்பூ தனது மகள் அனந்திதாவின் 20-வது பிறந்தநாளை கேக் வெட்டி கோலாகலமாக கொண்டாடிய நிலையில் அந்த புகைப்படங்களை அவர் இணையத்தில் பகிர்ந்து உள்ள நிலையில் அவருக்கு பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Advertisement

Kushboo Sundar இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@khushsundar)

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in