LATEST NEWS
‘அந்த காட்சியை எடுத்த பின் வீட்டுக்கு சென்று அழுதேன்’… ஜெயம் பட நடிகை சதா கூறிய கசப்பான அனுபவம்..!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வளம் வந்தவர் தான் நடிகை சதா.தெலுங்கு மற்றும் கன்னட மொழி உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். தமிழில் ஜெயம் திரைப்படம் மூலம் ஹீரோயினியாக அறிமுகமான நிலையில் இவரின் முதல் படமே நல்ல வாய்ப்பை தேடி தந்தது. அதனால் இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைத்தன. அவ்வகையில் எதிரி, வர்ணஜாலம்,அந்நியன் மற்றும் திருப்பதி உள்ளிட்ட பல படங்களில் நடித்த ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.
அதன் பிறகு இவருக்கு பட வாய்ப்புகள் குறைந்த நிலையில் பல வருடங்களுக்குப் பிறகு டார்ச் லைட் என்ற திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். சினிமாவை விட்டு சற்று விலகி இருந்தாலும் சமூக வலைத்தளங்களில் எப்போதுமே ஆக்டிவாக இருந்து வருகிறார். இந்த நிலையில் சதா சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தன்னுடைய வாழ்க்கையில் நடந்த கசப்பான அனுபவத்தை பகிர்ந்து கொண்டார்.
அதில், ஜெயம் திரைப்படத்தில் ஒரு மோசமான காட்சியில் நடித்ததை நினைத்து நான் வருத்தப்படுகின்றேன். என்னுடைய கன்னத்தில் வில்லனாக நடித்த கோபிஷந்த் நாக்கால் நக்குவது போன்ற காட்சி இருந்தது. அந்த காட்சியில் நடிக்க மாட்டேன் என்று இயக்குனரிடம் நான் சொன்னேன். ஆனால் படத்தில் இந்த காட்சி வேணும் என்று கூறி நடிக்க சொல்லி படமாக்கி விட்டார். அந்தக் காட்சியை எடுத்த பிறகு வீட்டிற்குச் சென்று நான் கதறி அழுதேன் என்று சதா மோசமான அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.