LATEST NEWS
“என்னால வெளியில தலை காட்ட முடியல”.. காரணம் இது தான்… திடீரென ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த நடிகை சமந்தா..!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து கொண்டிருக்கும் சமந்தா இறுதியாக விஜய் தேவரகொண்டா நடிப்பில் குஷி திரைப்படத்தில் நடித்திருந்தார். இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் சில காரணங்களால் 2021 ஆம் ஆண்டு இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர். இதனைத் தொடர்ந்து இருவருமே சினிமாவில் பிஸியாக நடித்து வரும் நிலையில் தெலுங்கில் பாய்ஸ் ஹாஸ்டல் என்ற திரைப்படம் வெளியானது.
இந்த திரைப்படத்தின் சிறப்பு திரையிடலில் நாக சைதன்யா கலந்து கொண்டார். இந்த நிலையில் குஷி திரைப்படத்திற்கு பிறகு மயோசிடிஸ் நோய் சிகிச்சைக்காக சமந்தா அமெரிக்கா சென்று உள்ளார். மறுபக்கம் இணையத்திலும் ஆக்டிவாக இருக்கும் சமந்தா சில பதிவுகளை பகிர்ந்து வருகிறார். அதன்படி சமீபத்தில் லைவ் சேட்டில் ரசிகர்களிடம் பேசிய சமந்தா, உடல் பிரச்சினை காரணமாக அளவுக்கு அதிகமாக ஸ்டராய்டு எடுத்துக்கொள்கிறேன்.
அதன் விளைவாகத்தான் என்னுடைய சிரமம் பல பாதிப்புகளை பெற்று வருவதாகவும் என் முகத்தை வெளியில் காட்ட முடியவில்லை என்றும் சமந்தா தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள இந்த செய்தி ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.