“வறுமையின் உச்சகட்டம்..” 2 வயது தம்பியின் சடலத்தை மடியில் கண்ணீருடன் ஏந்திய 8 வயது அண்ணன்.. ஒட்டுமொத்த இந்தியாவையும் கண்ணீர் கடலில் ஆழ்த்திய வீடியோ..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“வறுமையின் உச்சகட்டம்..” 2 வயது தம்பியின் சடலத்தை மடியில் கண்ணீருடன் ஏந்திய 8 வயது அண்ணன்.. ஒட்டுமொத்த இந்தியாவையும் கண்ணீர் கடலில் ஆழ்த்திய வீடியோ..!!

Published

on

மத்தியப் பிரதேச மாநிலத்தில், வறுமையின் காரணமாகத் தனது இரண்டு வயது தம்பியின் சடலத்தை 8 வயது சிறுவன் ஒருவன் கைகளில் ஏந்தி அமர்ந்திருக்கும் நெஞ்சை உலுக்கும் கொடூரமான விபரீதச் சம்பவம் அரங்கேறியுள்ளது. உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட தனது இரண்டு வயது குழந்தையை மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல, ஆம்புலன்ஸ் வாகனத்திற்காக அந்த ஏழைத் தந்தை ஒன்றரை மணி நேரத்திற்கும் மேலாகக் காத்திருந்தார். ஆனால், ஆம்புலன்ஸ் வராததால் அந்தப் பிஞ்சு குழந்தை தந்தையின் மடியிலேயே பரிதாபமாக உயிரிழந்தது.

குழந்தை இறந்த பிறகும், அவனது உடலைத் தனது கிராமத்திற்கு எடுத்துச் செல்ல வாகன வசதி கிடைக்காமல் அந்தத் தந்தை தவித்தார். அவ்வழியே சென்ற வாகன ஓட்டிகளிடம் உதவி கேட்டு அவர் கெஞ்சியபோதும், அவர்கள் பெரும் தொகையைக் கட்டணமாகக் கேட்டதால், போதிய பணமில்லாத அந்தத் தந்தை செய்வதறியாது திகைத்தார். இறுதியில், உடலை எடுத்துச் செல்ல வேறு வழியைத் தேடி தந்தை அலைந்தபோது, காக்க வைக்கப்பட்ட அவரது 8 வயது மூத்த மகன், தனது தம்பியின் சடலத்தை நெஞ்சோடு அணைத்தபடி சாலையோரம் கண்ணீருடன் அமர்ந்திருந்த காட்சி ஒட்டுமொத்த இந்தியாவையும் உலுக்கியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in