TRENDING
பிக்பாஸ் வீட்டில் யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட்…. டபுள் எவிக்ஷன் முடிவில் களமிறங்கிய கமல்…. ப்ரோமோவை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்….!!!
விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் தற்போது 80 நாட்களைக் கடந்த விறுவிறுப்பாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியின் தொடக்கத்தில் மொத்தம் 21 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில் தற்போது ஒன்பது போட்டியாளர்கள் மட்டுமே பிக் பாஸ் வீட்டில் உள்ளன. இதனைத் தொடர்ந்து இந்த வாரம் முழுவதும் பிக் பாஸ் போட்டியாளர்களின் குடும்பத்தினர் அனைவரும் வீட்டிற்குள் வருகை தந்தனர். இது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் பிக் பாஸ் வீட்டில்இருந்து இந்த வாரம் யார் வெளியேறப் போகிறார்கள் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்நிலையில் இன்றைய நாளுக்கான முதல் ப்ரோமோ வெளியாகி உள்ளது. அதில் கமல்ஹாசன் வந்தவுடன் அனைவரும் புத்தாண்டு வாழ்த்துக்கள் கூறுகிறார்கள். அதன் பிறகு போட்டியாளர்கள் அனைவரும் கமல்ஹாசனிடம் பேசிய பிறகு, டபுள் எவிக்சன் பண்ணா என்ன என்று கமல்ஹாசன் கேட்கிறார். அதனைக் கேட்டவுடன் அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். அதன் பிறகு தன் கையில் இருக்கும் எவிக்சன் கார்டை கமல்ஹாசன் காட்ட இன்றைய ப்ரோமோ அதனுடன் முடிவடைகிறது.
