இது பேலசா இல்ல பிக்பாஸ் வீடா?….. வீட்டின் புதிய தோற்றம்…..! எப்படி இருக்கு தெரியுமா?…. நீங்களே பாருங்க….!!!! – cinefeeds
Connect with us

TRENDING

இது பேலசா இல்ல பிக்பாஸ் வீடா?….. வீட்டின் புதிய தோற்றம்…..! எப்படி இருக்கு தெரியுமா?…. நீங்களே பாருங்க….!!!!

Published

on

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சிகளில் பிக் பாஸ் நிகழ்ச்சியும் ஒன்று. இந்த நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. பிக் பாஸ் ஏற்கனவே 5 சீசன் கடந்து வெற்றிகரமாக முடித்த நிலையில் தற்போது ஆறாவது சீசன் தொடங்க உள்ளது. வரும் 9-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை இந்த சீசன் தொடங்க உள்ளது. இந்த சீசனையும் வழக்கம்போல் கமல்ஹாசன் அவர்கள் தான் தொகுத்து வழங்குகிறார்கள். இதற்கான ப்ரோமோ சமீபத்தில் வெளியானது. இந்த முறை 20-க்கும் அதிகமான போட்டியாளர்கள் கலந்து கொள்ள இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

அதுமட்டுமில்லாமல் பிக் பாஸ் நிகழ்ச்சியில் உள்ள அந்த வீட்டின் அமைப்பை அடிக்கடி மாற்றிக் கொண்டிருப்பார்கள். அந்த வகையில் இந்த முறை மாற்றம் செய்யப்பட்டிருந்த வீட்டின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Advertisement

பிக் பாஸ் தமிழ் சீசன் 6 அக்டோபர் 9ஆம் தேதி மாலை 6:30 மணிக்கு பிரம்மாண்டமாக வெளியீட்டு விழா நடைபெற உள்ளது. பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் நடைபெறவிருக்கும் வீட்டின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வருகின்றது. இந்த சீசனில் முதல் முறை ஆரவ் டைட்டில் வென்றார். அதன் பிறகு இரண்டாவது சீசனில் ரித்விகா, மூன்றாவது சீசனில் முகின், நான்காவது சீசனில் ஆரி, ஐந்தாவது சீசனில் ராஜூ டைட்டில் வென்றனர் .

இந்த முறை எந்தெந்த போட்டியாளர்கள் கலந்து கொள்ள உள்ளார்கள் எப்படி இருக்க போகின்றது என்று ஆர்வம் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது.

Advertisement

மேலும் இதில் தொகுப்பாளர் டிடி, பாடகி ராஜலட்சுமி, தொலைக்காட்சி நடிகர்கள் அர்ச்சனா, ரோஷினி, ஸ்ரீநிதி, குக் வித் கோமாளி புகழ் தர்சா குப்தா, ஷில்பா மஞ்சுநாத், மனிஷா யாதவ் உள்ளிட்டோர் கலந்து கொள்ள உள்ளதாக தொடர்ந்து தகவல் வெளியாகி உள்ளது. இது உண்மையா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in