LATEST NEWS
இந்தியாவுக்கே அவமானம்.! மருத்துவமனை கழிவறையில் ரகசிய கேமரா… “மாட்டிக்கொண்ட 80 ரகசியப் படங்கள்” பெண் ஊழியர்களைப் படம் பிடித்த இந்திய வம்சாவளி டாக்டருக்குப் அமெரிக்காவில் சிறை தண்டனை..!!
அமெரிக்காவின் ஓஹியோ மாநிலத்தில் உள்ள மருத்துவமனை ஒன்றின் ஊழியர்கள் கழிவறையில் ரகசியக் கேமரா பொருத்தி, அங்கு வந்த பெண் பணியாளர்களை ரகசியமாகப் படம் பிடித்த இந்திய வம்சாவளி மருத்துவர் அத்வைத் தேஷ்முக் என்பவருக்கு அந்நாட்டு நீதிமன்றம் 6 மாத சிறைத் தண்டனை விதித்து அதிரடித் தீர்ப்பளித்துள்ளது. மேலும், அவருக்கு 3 ஆண்டுகள் நன்னடத்தை கண்காணிப்பு விதிக்கப்பட்டுள்ளதுடன், அடுத்த 15 ஆண்டுகளுக்குப் பாலியல் குற்றவாளியாகப் பதிவு செய்து கொள்ள வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2025-ஆம் ஆண்டு ஜூன் மாதம் புரோமெடிகா டோலிடோ மருத்துவமனையின் பொதுக் கழிவறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த செல்போன் ஒன்றை ஊழியர் ஒருவர் கண்டறிந்த போதே இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்தது. அப்போது அங்கிருந்த சாட்சிகள் அந்த போனை எடுக்க முயன்ற போது, அது தன்னுடையது என்று கூறி அத்வைத் தேஷ்முக் பறித்துச் சென்று ஆதாரங்களை அழிக்க முயன்றுள்ளார். இருப்பினும், போலீஸார் நடத்திய அதிரடி சோதனையில் அவரது போனில் இருந்து 80-க்கும் மேற்பட்ட ரகசியப் படங்கள் மற்றும் பாதிக்கப்பட்ட 6 பெண்களின் விவரங்கள் கண்டறியப்பட்டன.
இந்தக் கொடூரக் குற்றம் நிரூபிக்கப்பட்ட போது அவர் டோலிடோ பல்கலைக்கழகத்தில் மூன்றாம் ஆண்டு மருத்துவப் படிப்பை (Medical Resident) மேற்கொண்டு வந்தார். இச்சம்பவத்தைத் தொடர்ந்து பல்கலைக்கழக நிர்வாகம் அவரை உடனடியாகப் பணியிடை நீக்கம் செய்ததுடன், அவரது மருத்துவ உரிமத்தையும் ரத்து செய்துள்ளது. நீதிமன்றத்தில் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டு அவர் மன்னிப்புக் கோரிய போதிலும், அவரது இந்த அநாகரிகச் செயலுக்காகக் கடுமையான கட்டுப்பாடுகளுடன் கூடிய சிறைத் தண்டனையை நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
