LATEST NEWS
மது அருந்திவிட்டு கார் ஓட்டிய வார்னர்… ரூ.2 லட்சம் அபராதத்துடன் சிறை தண்டனை..? அதிர்ச்சியில் கிரிக்கெட் ரசிகர்கள்..!!
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் அதிரடி ஆட்டக்காரர் டேவிட் வார்னர், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டிய வழக்கில் நீதிமன்றத்தில் தனது குற்றத்தை அதிகாரப்பூர்வமாக ஒப்புக்கொண்டுள்ள சம்பவம் சர்வதேச கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அண்மையில் போக்குவரத்து போலீஸாரின் வாகனச் சோதனையில் சிக்குண்ட வார்னர் மீது, சிட்னி உள்ளூர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. இந்த வழக்கின் இன்றைய விசாரணையின் போது, தன் மீதான குற்றச்சாட்டை வார்னர் மறுப்பின்றி ஏற்றுக்கொண்டார்.
டேவிட் வார்னர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து, அந்நாட்டுச் சட்டப்படி அவருக்குக் கடுமையான தண்டனைகள் விதிக்கப்படக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விவகாரத்தில் அவருக்குக் குறைந்தபட்சமாக இந்திய மதிப்பில் சுமார் ரூ.2 லட்சம் வரை அபராதமும், குற்றத்தின் தீவிரத்தைக் கருத்தில்கொண்டு அதிகபட்சமாக 9 மாதங்கள் வரை சிறை தண்டனையும் விதிக்கப்பட வாய்ப்புள்ளதாக ஆஸ்திரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்தத் தீர்ப்பு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ள நிலையில், உலகெங்கிலும் உள்ள அவரது கிரிக்கெட் ரசிகர்கள் பெரும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.
