“குழந்தை திருமணம் ஒழியும் வரை ஓயமாட்டோம்..” கைதாகாமல் எஸ்கேப்பாக அப்பாவி வேஷம்… வைரல் வீடியோவை பகிர்ந்து முதல்வரின் மாஸ் எச்சரிக்கை..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“குழந்தை திருமணம் ஒழியும் வரை ஓயமாட்டோம்..” கைதாகாமல் எஸ்கேப்பாக அப்பாவி வேஷம்… வைரல் வீடியோவை பகிர்ந்து முதல்வரின் மாஸ் எச்சரிக்கை..!!

Published

on

அசாம் மாநிலத்தில் குழந்தை திருமணத்திற்கு எதிரான அரசின் கடுமையான நடவடிக்கைகள் தொடர்ந்து தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், சோசியல் மீடியாவில் வைரலான ஒரு வீடியோவை அம்மாநில முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மா பகிர்ந்துள்ளார். குழந்தை திருமணத் தவற்றில் ஈடுபடுபவர்கள் சட்டத்திலிருந்து தப்பிக்க அப்பாவி போல் நாடகமாடுவதையும், பின்னர் அசாம் காவல்துறையினரிடம் சிக்கிக் கொள்வதையும் இந்த வீடியோ வெளிப்படுத்துவதாக அவர் தெரிவித்துள்ளார்.

அசாம் மாநிலத்தில் குழந்தை திருமணத்தை முற்றிலுமாக ஒழிக்கும் வரை தங்களது அரசு ஒருபோதும் பின்வாங்காது என்று முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மா திட்டவட்டமாக எச்சரித்துள்ளார். “அசாமில் இருந்து குழந்தை திருமணம் முழுமையாக ஒழிக்கப்படும் வரை நாங்கள் நிறுத்த மாட்டோம்” என்று அவர் தனது சமூக வலைதளப் பதிவில் உறுதியளித்துள்ளார்.

Advertisement

இந்தத் தீவிர நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இதுவரை 460 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், 537 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் முதலமைச்சர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குழந்தை திருமணத்தில் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதில் அரசு உறுதியாக இருப்பதாகவும் அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in