VIDEOS
புது கார் வாங்கி 6 மாசம் கூட ஆகல… அதுக்குள்ள விபத்தில் சிக்கிய குக் வித் கோமாளி பிரபலம்… அவரே வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ..!!
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மிக பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் காமெடியனாக வந்து ரசிகர்கள் மனதை கவர்ந்தவர் தான் சக்தி. இவர் தற்போது அந்த நிகழ்ச்சியில் வருவது குறைந்து விட்டாலும் சொந்தமாக யூடியூப் சேனல் நடத்தி அதன் மூலம் லட்சக்கணக்கில் சம்பாதித்து வருகிறார். விஜய் டிவியிலும் பல நிகழ்ச்சிகளில் அவ்வப்போது இவரை காண முடிகிறது. இவருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.
இந்நிலையில் இவர் சில மாதங்களுக்கு முன்பு புதிய கார் ஒன்றை வாங்கியுள்ளதாக புகைப்படத்துடன் கூறியிருந்தார். இந்நிலையில் சக்தி கார் வாங்கி இன்னும் ஆறு மாதம் கூட ஆகாத நிலையில் சென்னை சென்ட்ரல் அருகில் விபத்தில் சிக்கியுள்ளார். அவரின் காரை ஓட்டிச் சென்றபோது ஒரு பேருந்து காரை உரசியபடி வந்து இடித்துச் சென்றுள்ளது. அதில் சக்தியின் தலையில் பலமாக அடிபட்டு உள்ளது.
இருந்தாலும் பெரிய அளவிற்கு காயம் எதுவும் ஏற்படவில்லை என அவர் கூறியுள்ளார். இருந்தாலும் அவரின் புதிய கார் விபத்தில் பெரிய சேதம் அடைந்துள்ளதாகவும் அதனை அவர் ஒரு வீடியோவாக வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.
