LATEST NEWS
திமுக – தவெக கூட்டணி?.. வீரபாண்டியன் கொடுத்த ஓகே.. தமிழக அரசியலில் அடுத்த புயல்..!!
பாஜக போன்ற மதவாத சக்திகளை வீழ்த்துவதற்காக தமிழக வெற்றிக் கழகமும் திமுகவும் ஒன்றிணைய வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் வீரபாண்டியன் தெரிவித்துள்ளார். தேர்தலில் கட்சிகள் தங்களுக்குள் போட்டி போடுவது என்பது வேறு, ஆனால் நாட்டின் மதச்சார்பின்மைக்கு எதிராக இருக்கும் வகுப்புவாத சக்திகளை எதிர்ப்பது என்பது வேறு என்று அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், இத்தகைய சக்திகளை ஒடுக்க இரு கட்சிகளும் ஒரே அணியில் திரள வேண்டும் என்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனின் கருத்து முற்றிலும் ஏற்புடையது என்றும் அவர் கூறியுள்ளார்.
தவெக மற்றும் திமுக ஆகிய இரு கட்சிகள் மட்டுமல்லாமல், பாஜகவின் அரசியலை எதிர்க்கும் அனைத்து ஜனநாயக சக்திகளும் ஓரணியில் திரள வேண்டியது இந்த நேரத்தில் மிக அவசியமான ஒன்று என வீரபாண்டியன் வலியுறுத்தியுள்ளார். தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிந்தைய அரசியல் சூழலில், தவெக மற்றும் திமுக இடையே கடுமையான அரசியல் மோதல் நிலவி வரும் வேளையில், சிபிஐ தலைவரின் இந்த அழைப்பு அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
