LATEST NEWS
வாரிசு படத்தில் நடிகை ராஷ்மிகாவுக்கு டப்பிங் பேசியது யார் தெரியுமா?…. இதோ நீங்களே பாருங்க….!!!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக கொடி கட்டி பறந்து கொண்டிருக்கும் நடிகர் விஜய் நடிப்பில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியான திரைப்படம் தான் வாரிசு. இந்தத் திரைப்படத்தை வம்சி இயக்கிய நிலையில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க சரத்குமார், ஜெயசுதா, பிரகாஷ்ராஜ் மற்றும் பிரபு உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இந்த திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இந்த திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்த ராஸ்மிகாவுக்கு தமிழில் இது இரண்டாவது படம். முதலில் அவர் கார்த்தி நடிப்பில் சுல்தான் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த இரண்டு திரைப்படங்களுக்குமே ராஷ்மிகாவுக்காக டப்பிங் பேசியது ஐஸ்வர்யா பாஸ்கர்தான். தமிழ் சினிமாவின் பிரபல காமெடி நடிகரான ms பாஸ்கரின் மகள் தான் ஐஸ்வர்யா. அவர்தான் ராஷ்மிகாவுக்கு டப்பிங் பேசியுள்ளார்.
