CRIME
அடச்சீ..! வேலியே பயிரை மேய்ந்த கொடூரம்… 17 வயது மகளை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த தந்தை…! நீதிமன்றம் கொடுத்த அதிரடி தீர்ப்பு..!!
சேலம் மாவட்டம் சங்ககிரியைச் சேர்ந்த ஒரு நபர், தனது 17 வயது மகளை மிரட்டித் தொடர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். “வேலியே பயிரை மேய்ந்த கதையாக” சொந்தத் தந்தையே தனது மகளுக்கு எதிராக இத்தகைய கொடூரச் செயலில் ஈடுபட்டது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் மனமுடைந்த சிறுமியின் தாயார் உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இந்த வழக்கினை விசாரித்த சேலம் போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி மீனாட்சி அவர்கள் குற்றவாளிக்கு 21 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து அதிரடி தீர்ப்பளித்துள்ளார். பெற்ற மகளுக்கே பாலியல் தொல்லை அளித்த கொடூரத் தந்தைக்கு நீதிமன்றம் வழங்கியுள்ள இந்தச் கடுமையான தீர்ப்பு பொதுமக்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.
