LATEST NEWS
‘லியோ பாத்துட்டேன் வெறித்தனமா இருக்கு’… வேற லெவலில் மாஸாக ‘லியோ’ அப்டேட் கொடுத்த கவுதம் மேனன்…!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், த்ரிஷா நடித்து வரும் படம், ‘லியோ’. கவுதம் வாசுதேவ் மேனன், அர்ஜுன், மிஷ்கின், பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், சஞ்சய் தத் உட்பட பலர் இதில் நடிக்கின்றனர். மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார். அனிருத் இசை அமைக்கிறார். செவன் ஸ்கிரீன் நிறுவனம் படத்தைத் தயாரிக்கிறது. லியோ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது.
இத்திரைப்படம் வருகிற அக்டோபர் மாதம் 19-ஆம் தேதி திரைக்கு வர உள்ளது. படம் ஆரம்பித்த நாள் முதலில் இருந்து எப்போது ரிலீஸ் ஆகும் என்ன ரசிகர்கள் ஆவலோடு காத்துக் கொண்டிருகின்றனர் .லியோ படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறும் என ரசிகர்கள் ஆவலோடு காத்துக் கொண்டிருந்தனர். ஆனால் இசை வெளியீட்டு விழா ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் சென்னையில் வைத்து லியோ படத்தின் ஃப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியை நடத்த திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில், லொயோலா கல்லூரி மாணவர்களுடன் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட கவுதம் வாசுதேவ் மேனன் அவர்களிடம் மாணவர்கள் லியோ அப்டேட் பற்றி கேட்டனர். மேலும் அவரது கேரக்டர் குறித்தும் கேள்வி எழுப்பினர். இதுகுறித்து அவர் கூறும் பொழுது, ‘படத்தை பார்த்து கேரா தெரிஞ்சுக்கோங்க. மொத்தத்தில் லியோ படம் சூப்பரா வந்திருக்கு. தளபதியுடன் நடித்தது ஒரு மறக்க முடியாத அனுபவம்’ என்றும் கூறினார். மேலும் அவர்களுக்காக பாட்டு பாடியும் அசத்தினார். இதோ அந்த வைரல் வீடியோ…