LATEST NEWS
ஏன் இந்த சோகம்…? வெளிநாட்டில் இருக்கும் நடிகை சமந்தா வெளியிட்ட புகைப்படங்கள்…! கவலையில் ரசிகர்கள்…!
தென்னிந்திய சினிமா அளவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகை சமந்தா. அவரின் அடுத்தடுத்த படங்கள் பான் இந்தியா திரைப்படங்களாக வெளியாகி வருகின்றன. அடுத்தடுத்த பிரச்சனைகள் காரணமாக மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளான போதிலும் தன்னுடைய மனதை வலிமையாக வைத்துக் கொண்டு சமந்தா வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கிறார்.
இவ்வாறு தெலுங்கு மற்றும் இந்தி என அடுத்தடுத்து மொழிகளில் பிஸியாக நடித்து ரசிகர்களின் கனவு கண்ணியாக வலம் வருகிறார் நடிகை சமந்தா. தற்போது சிட்டாடல் இந்தியா தொடரில் நடித்துள்ளார். இதன் படபிடிப்பை முடித்த பிறகு சமந்தா தான் நடிப்பிலிருந்து சிறிது காலம் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு ஓய்வெடுக்க உள்ளதாக அறிவித்துள்ளார். தற்பொழுது அவர் மயோசிட்டிஸ் நோய்க்காக அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது.
இறுதியாக இவர் நடிப்பில் வெளியான குஷி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதைத்தொடர்ந்து வெளிநாட்டில் இருக்கும் இவர் சைக்கிளிங் செய்யும் வீடியோ ஒன்றையும், மேலும் சோகமாக அமர்ந்திருக்கும் சில புகைப்படங்களையும், மகிழ்ச்சியாக இருக்கும் புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார். தற்பொழுது அவரின் இந்த பதிவானது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த பதிவு…
View this post on Instagram