அடக்கடவுளே..! துக்கமாக மாறிய பிறந்தநாள் கொண்டாட்டம்… கேக் வெட்டும் நேரத்தில் பாய்ந்து வந்த எமன்… கண்ணிமைக்கும் நேரத்தில் துடிதுடித்து பலியான சிறுமி… கதறி துடிக்கும் பெற்றோர்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

அடக்கடவுளே..! துக்கமாக மாறிய பிறந்தநாள் கொண்டாட்டம்… கேக் வெட்டும் நேரத்தில் பாய்ந்து வந்த எமன்… கண்ணிமைக்கும் நேரத்தில் துடிதுடித்து பலியான சிறுமி… கதறி துடிக்கும் பெற்றோர்..!!

Published

on

ஹைதராபாத் டேங்க் பண்ட் பகுதியில் நள்ளிரவில் நடந்த ஒரு கொடூரமான சாலை விபத்தில், பிறந்தநாள் கொண்டாட வந்த சிறுமி உட்பட இருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அல்வால் பகுதியைச் சேர்ந்த சாய்நாத் என்பவரது குடும்பத்தினர், தங்களது 6 வயது மகள் சாரக்ஷியின் பிறந்தநாளைக் கொண்டாடுவதற்காக சனிக்கிழமை இரவு குகட்பல்லியில் உள்ள பிவிஆர் மாலில் இரண்டாம் ஆட்டத் திரைப்படம் பார்த்துள்ளனர். பின்னர், நள்ளிரவில் பிறந்தநாள் கேக் வெட்டுவதற்காக டேங்க் பண்ட் பகுதிக்குக் காரில் வந்துள்ளனர்.

ஞாயிற்றுக்கிழமை அதிகாலை சுமார் 2:15 மணியளவில், அவர்கள் தங்களது காரைச் சாலையோரமாக நிறுத்திவிட்டு, உசேன் சாகர் ஏரிப் பகுதியை நோக்கிக் கடக்க முயன்றனர். அப்போது, சிறுமி சாரக்ஷியை அவளது உறவினரான விஸ்வநாத் (41) என்பவர் கைகளில் தூக்கிக்கொண்டு சாலையைக் கடந்தபோது, செகந்திராபாத் திசையிலிருந்து மிக அதிவேகமாக வந்த ஒரு லாரி அவர்கள் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் சிறுமி சாரக்ஷி மற்றும் விஸ்வநாத் ஆகிய இருவரும் தூக்கி வீசப்பட்டு மிகக் கடுமையான காயங்களுக்குள்ளாயினர்.

Advertisement

விபத்துக்குள்ளான சிறுமியை உடனடியாக கிம்ஸ் மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற போதிலும், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் உறுதி செய்தனர். அதேபோல், பலத்த காயமடைந்த விஸ்வநாத் காந்தி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். தங்களது செல்ல மகளின் பிறந்தநாளைக் கொண்டாட ஆசையோடு வந்த இடத்தில், அவளது பிறந்தநாளன்றே அவளும், உறவினரும் உயிரிழந்த சம்பவம் அந்தக் குடும்பத்தினரிடையே ஆறாத் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்து குறித்து சாய்நாத் அளித்த புகாரின் பேரில், தொமலகுடா போலீசார் வழக்குப் பதிவு செய்து, லாரி ஓட்டுநர் மற்றும் அவரது உதவியாளரைக் காவலில் எடுத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in