LATEST NEWS
கருப்பு உடையில் 18 வது பிறந்த நாளை கொண்டாடிய…. கிளாமர் குயின் அனிகா….. இணையத்தை கலக்கும் புகைப்படங்கள் இதோ….!!!!
தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர் அனிகா சுரேந்திரன். நடிகர் அஜித் நடிப்பில் வெளியான என்னை அறிந்தால் என்ற திரைப்படத்தில் திரிஷாவின் மகளாக நடித்து குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். மலையாளத்தில் குட்டி நட்சத்திரமாக சிறு வயதிலேயே நடிக்க ஆரம்பித்த இவர் நானும் ரவுடிதான் மற்றும் மிருதன் உள்ளிட்ட அடுத்தடுத்த படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.
அதன் பிறகு நடிகர் அஜித் மற்றும் நயன்தாரா நடிப்பில் வெளியான விசுவாசம் திரைப்படத்தில் அவர்களுக்கு மகளாக நடித்து பெரும் வரவேற்பை பெற்றார். அப்ப படத்தில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். பின்னர் தனது 14 வயதில் போட்டோ சூட் எடுக்க ஆரம்பித்து அவர் கிளாமராக புகைப்படங்களை எடுத்து வருகிறார். அதாவது குட்டி நயன்தாரா என்று ரசிகர்கள் கூறும் அளவிற்கு அவரின் தோற்றம் வெகுவாக பலரையும் கவர்ந்துள்ளது.
தற்போது இவருக்கு ஹீரோயின் வாய்ப்பும் கிடைத்துள்ளது. மலையாளத்தில் புதுமுக நடிகர் ஒருவருடன் ஓ மை டார்லிங் என்ற திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக ஹீரோயினியாக நடிகை அனிகா நடித்து வருகிறார். இந்நிலையில் அனிகா சுரேந்திரன் தனது 18-வது பிறந்த நாளை நேற்று கொண்டாடியுள்ளார். அவர் பெரிய கேக் வெட்டி தனது 18 வது பிறந்த நாளை கொண்டாடிய நிலையில் அந்த புகைப்படங்கள் தற்போது நேரத்தில் வைரல் ஆகி வருகிறது.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க
