இனி உள்ளே அனுமதி இல்லை! “உங்க செல்போனை இங்க வச்சுட்டு போங்க”திருச்செந்தூர் கோவில் நிர்வாகம் புதிய உத்தரவு…!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

இனி உள்ளே அனுமதி இல்லை! “உங்க செல்போனை இங்க வச்சுட்டு போங்க”திருச்செந்தூர் கோவில் நிர்வாகம் புதிய உத்தரவு…!!

Published

on

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்குள் பக்தர்கள் செல்போன் கொண்டு செல்வதற்கான தடை தற்போது மேலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி, பொது தரிசனம் முதல் கட்டணத் தரிசனம் வரை அனைத்து வரிசைகளிலும் வரும் பக்தர்கள் முழுமையான சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பிறகே உள்ளே அனுமதிக்கப்படுவார்கள். இந்த சோதனையின் போது யாரிடமாவது செல்போன் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால், அது உடனடியாக பறிமுதல் செய்யப்படும் என கோவில் நிர்வாகம் தரப்பில் உறுதியாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

உண்மையில், கோவிலுக்குள் செல்போன் பயன்படுத்தக் கூடாது என்ற விதிமுறை 2022-ஆம் ஆண்டிலிருந்தே அமலில் இருந்தாலும், அதுவே இப்போது கறாராக நடைமுறைப்படுத்தப்படுகிறது. எனவே, பக்தர்கள் தங்களது செல்போன்களை தாங்கள் வந்த வாகனங்களிலோ அல்லது தங்கியிருக்கும் அறைகளிலோ முன்கூட்டியே வைத்துவிட்டு வரலாம். அல்லது, கோவில் நிர்வாகத்தால் பக்தர்களின் வசதிக்காக பிரத்தியேகமாக அமைக்கப்பட்டுள்ள செல்போன் பாதுகாப்பு வைப்பகங்களில் ஒப்படைத்துவிட்டு எவ்வித சிரமமும் இன்றி நிம்மதியாக சாமி தரிசனம் செய்யலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in