உச்சகட்ட கொடூரம்..! “பூஜை அறையில் சூலாயுதத்தில் மனைவியின் தலை” மாந்த்ரீக பூஜைக்காகத் தந்தையையும் வெட்டிக் கொன்ற கணவன்.. நெஞ்சை உலுக்கும் சம்பவம்..!! – cinefeeds
Connect with us

CRIME

உச்சகட்ட கொடூரம்..! “பூஜை அறையில் சூலாயுதத்தில் மனைவியின் தலை” மாந்த்ரீக பூஜைக்காகத் தந்தையையும் வெட்டிக் கொன்ற கணவன்.. நெஞ்சை உலுக்கும் சம்பவம்..!!

Published

on

மேற்கு வங்க மாநிலம் பங்குரா மாவட்டத்தில் உள்ள நெட் லால் பாபா மனாச்சார் பகுதியில், மாந்த்ரீக வழிபாட்டிற்காகக் கணவனே தனது மனைவியின் தலையைத் துண்டித்து சூலாயுதத்தில் வைத்த கொடூரச் சம்பவம் ஒட்டுமொத்தப் பகுதியையும் உலுக்கியுள்ளது. மகா அஷ்டமி திருநாளை முன்னிட்டு , மங்கல் சௌத்ரி என்ற நபர் மாந்த்ரீக சடங்குகளைச் செய்வதற்காகத் தனது 39 வயது மனைவி ரும்பா சௌத்ரியைக் கொடூரமாகக் கொலை செய்துள்ளார். பின்னர் அவரது தலையைத் தனியாகத் துண்டித்து, பூஜை அறையில் இருந்த சூலாயுதத்தின் மீது சொருகி வைத்து மாந்த்ரீக பூஜைகளைச் செய்ததாகக் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தக் கொடூரம் இத்துடன் நிற்கவில்லை. மனைவியைக் கொலை செய்த கையோடு, வீட்டின் முற்றத்தில் நின்றுகொண்டிருந்த தனது 60 வயது தந்தை இராஜேந்திர சௌத்ரியையும் மங்கல் சௌத்ரி கொடூரமாக வெட்டிக் கொலை செய்துள்ளார். தொடர்ந்து தனது சகோதரரையும் கொலை செய்ய முயன்றபோது, அவர் புத்திசாலித்தனமாக அங்கிருந்து தப்பியோடி உயிர் பிழைத்துள்ளார். இதன் பின்னர், நள்ளிரவில் கையில் ரத்தக்கறை படிந்த கத்தியுடன் மங்கல் சௌத்ரி கிராமத்துத் தெருக்களில் சுற்றித் திரிந்ததால், ஒட்டுமொத்தக் கிராம மக்களும் பயத்தில் உறைந்து போயுள்ளனர்.

Advertisement

இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மங்கலும் அவரது மனைவியும் அடிக்கடி வீட்டில் விசித்திரமான பூஜைகளைச் செய்து வந்ததாகவும், அவர்களின் வீட்டிற்கு மாந்த்ரீகவாதி ஒருவர் அடிக்கடி வந்து சென்றதாகவும் உள்ளூர் மக்கள் தெரிவித்துள்ளனர். இந்த இரட்டைக் கொலைகள் முற்றிலும் மூடநம்பிக்கையின் காரணமாகவே நடந்துள்ளதாகச் சந்தேகிக்கப்படும் நிலையில், தப்பியோடிய மாந்த்ரீகவாதியைத் தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in