CRIME
ஐயோ என்ன நடந்துச்சு..? ஒரே கயிற்றில் தொங்கிய இரு நண்பர்களின் சடலங்கள்… தசரத் திருவிழாவிற்குச் சென்ற ஊழியர்களுக்கு நேர்ந்த கொடூர மர்மம்..!!
உத்தரப் பிரதேச மாநிலம் புலந்த்சாஹரில், தசரத் திருவிழாக் கண்காண்பைக் காணச் சென்ற பிரியான்ஷு மற்றும் சுமித் என்ற இரு நண்பர்கள், ஒரே கயிற்றில் மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நொய்டாவில் உள்ள யமஹா மோட்டார்ஸ் (Yamaha) நிறுவனத்தில் பணியாற்றி வந்த இவ்விரு இளைஞர்களும், தசரத் பண்டிகையன்று கண்காட்சியைப் பார்க்கச் செல்வதாகக் கூறிவிட்டு வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.
அவர்கள் இரவு வெகுநேரமாகியும் வீடு திரும்பாததால் பதற்றமடைந்த குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தும் அவர்களைப் பற்றிய எந்தவொரு தகவலும் கிடைக்கவில்லை. இந்த நிலையில், புதன்கிழமை மாலை சுமார் 7 மணியளவில் கிராமத்திற்கு அருகிலுள்ள ஒரு விவசாய நிலத்தின் ஓரத்தில் இருந்த மரத்தில், இவர்கள் இருவரும் ஒரே கயிற்றில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாகக் கிடப்பதை உள்ளூர் கிராம மக்கள் பார்த்து அதிர்ச்சியடைந்து போலீசாருக்குத் தகவல் கொடுத்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசாரும் தடயவியல் நிபுணர் குழுவினரும் உடல்களைக் கைப்பற்றி தீவிர விசாரணை நடத்தினர். தனது மகன்கள் தற்கொலை செய்து கொள்ள வாய்ப்பில்லை என்றும், யாரோ அவர்களைக் கொலை செய்துவிட்டு உடல்களை மரத்தில் தொங்கவிட்டுள்ளனர் என்றும் குடும்பத்தினர் சந்தேகிக்கின்றனர். உடல்கள் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ள நிலையில், அதன் அறிக்கை வந்த பிறகே இது கொலையா அல்லது தற்கொலையா என்பது குறித்த உண்மைத் தன்மை தெரியவரும் எனப் போலீசார் தெரிவித்துள்ளனர்.
