“ஆற்றுக்கு குளிக்க போகலாம் வா.. ” 17 வயது சிறுமியை புதருக்குள் இழுத்து சென்று.. 23 வயது காம கொடூரன் செய்த வெறிச்செயல்.. குலை நடுங்க வைக்கும் பின்னணி..!! – cinefeeds
Connect with us

CRIME

“ஆற்றுக்கு குளிக்க போகலாம் வா.. ” 17 வயது சிறுமியை புதருக்குள் இழுத்து சென்று.. 23 வயது காம கொடூரன் செய்த வெறிச்செயல்.. குலை நடுங்க வைக்கும் பின்னணி..!!

Published

on

ஜார்கண்ட் மாநிலத் தலைநகர் ராஞ்சியில் உள்ள மர்து கிராமத்தில், 17 வயது சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் பகவத் மெஹ்தோ (23) என்ற வாலிபரை காவல்துறை கைது செய்துள்ளது. ஆற்றுக்குக் குளிக்கச் செல்லலாம் என ஆசை வார்த்தை கூறி அழைத்துச் சென்ற அந்த நபர், சிறுமியைப் புதருக்குள் இழுத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். பின்னர், இந்த விஷயம் வெளியில் தெரிந்துவிடும் என்ற பயத்தில் சிறுமியைத் கொடூரமான முறையில் கொலை செய்துவிட்டு, எதுவுமே நடக்காதது போல அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

மாலை நேரமாகியும் சிறுமி வீடு திரும்பாததால் பதற்றமடைந்த குடும்பத்தினர், பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். காணாமல் போனதாக வழக்குப்பதிவு செய்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தியதில், புதருக்குள் இருந்து சிறுமியின் உடல் கண்டெடுக்கப்பட்டது. இந்தத் துயரச் சம்பவத்தில் பகவத் மெஹ்தோதான் கொலையாளி என்பதை உறுதி செய்த போலீஸார், அவரை உடனடியாகக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in