CINEMA
ரேவதி என்று பெயர் வைக்கும் பொழுது ரொம்பவே அழுதேன்…. நடிகை ரேவதி ஓபன் டாக்…!!

80 மற்றும் 90களில் தமிழ் சினிமாவில் முக்கிய நடிகையாக இருந்தவர் நடிகர் ரேவதி. தேவர்மகன் உட்பட பல படங்களில் நடித்து பிரபலமான இவர் பல விருதுகளையும் வாங்கி உள்ளார் . திருமணம், குடும்பம் என செட்டிலா ஆன இவர் திரும்பவும் பல ஆண்டுகளுக்கு பின் தனுஷின் பவர் பாண்டி ,திருச்சிற்றம்பலம் போன்ற படங்களில் நடித்திருந்தார். தற்போது 58 வயதாகும் இவர் சமீப காலமாகவே படங்கள் இயக்குவதில் கவனம் செலுத்தி வருகிறார். சமீபத்தில் சலாம் வெங்கி என்ற ஹிந்தி படத்தை இயக்கினார்.
இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய அவர், ரேவதி என்று பெயர் வைக்கும் பொழுது ரொம்பவே அழுதேன் . என்னுடைய நிஜ பெயர் ஆஷா. ரேவதி என்று பெயர் வைத்த சில நாட்களில் யார் என்னை ரேவதி என்று கூப்பிட்டாலும் திரும்பி கூட பார்க்க மாட்டேன் என்று கூறியுள்ளார்.