“எருமை மாட்டுக்கு சேலை கட்டுன மாதிரி இருக்கு”…. ஜனனியின் மோசமான பேச்சுக்கு பதிலடி கொடுத்த ரட்சிதாவின் கணவர்….!!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“எருமை மாட்டுக்கு சேலை கட்டுன மாதிரி இருக்கு”…. ஜனனியின் மோசமான பேச்சுக்கு பதிலடி கொடுத்த ரட்சிதாவின் கணவர்….!!!!

Published

on

விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் தற்போது ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. சுமார் 50 நாட்களைக் கடந்துள்ள இந்த நிகழ்ச்சியில் தற்போது 14 போட்டியாளர்கள் உள்ளனர். ஒவ்வொரு வாரமும் புதுவிதமான டாஸ்க் போட்டியாளர்களுக்கு கொடுக்கப்பட்டு வருகிறது. கடந்த வாரம் போட்டியாளர்கள் சரியாக விளையாடவில்லை என கமல்ஹாசன் கடும் கோபமாக கூறிய நிலையில் இந்த வாரம் போட்டி மிகக் கடுமையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டு உள்ளவர்தான் சீரியல் நடிகை ரட்சிதா. இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. இவர் பெரும்பாலும் சேலையில்தான் தோற்றமளிப்பார். அதன் காரணமாகவே இவருக்கு ரசிகர் பட்டாளம் ஏராளம். இப்படி இருக்கையில் பிக் பாஸ் வீட்டில் போட்டியாளரான ஜனனி ரட்சிதாவின் உடை பற்றி விமர்சித்து பேசியது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

Advertisement

அதாவது எருமை மாட்டிற்கு சேலை கட்டி விட்டது போல இருக்கு என ஜனனி கூறியது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் ரச்சிதாவை பிரிந்து வாழும் கணவர் தினேஷ் பிக் பாஸ் சென்றதிலிருந்து தனது மனைவிக்கு ஆதரவு தெரிவித்து பல கருத்துக்களை பதிவு செய்து வருகிறார் . அவ்வகையில் தற்போது ஜனனிக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து உள்ள பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in