முதல் முறையாக பிக்பாஸ் வீட்டில் அந்த போட்டியாளருடன் சண்டை போடும் கதிரவன்…. வெளியானது இன்றைய ப்ரோமோ….!!!! - cinefeeds
Connect with us

TRENDING

முதல் முறையாக பிக்பாஸ் வீட்டில் அந்த போட்டியாளருடன் சண்டை போடும் கதிரவன்…. வெளியானது இன்றைய ப்ரோமோ….!!!!

Published

on

விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் தற்போது 70 நாட்களைக் கடந்து விறுவிறுப்பாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சி தொடக்கத்தில் மொத்தம் 21 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில் ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு போட்டியாளர் வெளியேற இதுவரை 11 போட்டியாளர்கள் வெளியேறி தற்போது 10 போட்டியாளர்கள் மட்டுமே பிக் பாஸ் வீட்டில் உள்ளனர். இந்த வாரம் மைனா நந்தினி பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறுவார் எனவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் இந்த வாரம் பிக் பாஸ் போட்டியாளர்களுக்கு கனா காணும் காலங்கள் என்ற பாடசாலை டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் போட்டியாளர்கள் அனைவரும் அருமையாக விளையாடி வருகிறார்கள். இதனிடையே முதல் முறையாக தனலட்சுமி மற்றும் கதிருக்கு இடையே வாக்குவாதம் நடந்துள்ளது. அப்போது கதிரவன் தப்பு பண்ணினால் உணரும் தனலட்சுமி என்று கூறிய நிலையில் அதற்கு தனலட்சுமி எனக்கு உங்கள மாதிரி நடிக்க தெரியாது என கூறியுள்ளார். அது தொடர்பான ப்ரோமோ தற்போது வெளியாகி உள்ளது.

Advertisement

 

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in