“அய்யோ… மின்னல் தாக்கிய காதலன்..” முகம் நீல நிறமாக மாறிய கொடூரம்.. அடுத்த நிமிடமே காதலி செய்த அசாத்திய அற்புதம்.. நெஞ்சை நெகிழ வைக்கும் உண்மைச் சம்பவம்..!! – cinefeeds
Connect with us

CRIME

“அய்யோ… மின்னல் தாக்கிய காதலன்..” முகம் நீல நிறமாக மாறிய கொடூரம்.. அடுத்த நிமிடமே காதலி செய்த அசாத்திய அற்புதம்.. நெஞ்சை நெகிழ வைக்கும் உண்மைச் சம்பவம்..!!

Published

on

அமெரிக்காவின் விஸ்கான்சின் பகுதியில் உள்ள கெட்டில் மொரைன் வனப்பகுதியில் கடந்த 2025-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 9 அன்று, நிக் ப்ரோடெரிக் மற்றும் ஈவா ஆகிய காதலர்கள் 10 மைல் தூர நடைப்பயணம் மேற்கொண்டனர். அப்போது திடீரென பெய்த கனமழையின் போது, அவர்கள் அருகே இருந்த மரத்தில் பயங்கர மின்னல் தாக்கியது. மின்னலின் மின்சாரம் தரை வழியாகப் பரவியதில் இருவரும் நிலைகுலாய்ந்தனர். சுயநினைவு திரும்பிய ஈவா, அருகில் கிடந்த நிக்கின் முகம் நீல நிறமாக மாறி, சுவாசம் நின்று போயிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

வனப்பகுதியில் கைப்பேசி சிக்னல் சரியாகக் கிடைக்காததாலும், அடர்ந்த காடு என்பதாலும் மீட்புக் குழுவினர் சம்பவ இடத்தை அடைய சுமார் 50 நிமிடங்கள் ஆனது. அதுவரை காத்திராமல், தானும் மின்னல் தாக்குதலால் பாதிக்கப்பட்டிருந்த நிலையிலும் ஈவா துணிச்சலுடன் செயல்பட்டார். நிக்கிற்கு ஒருமுறை அல்ல, இரண்டு முறை இதய நுரையீரல் மீட்பு சிகிச்சை அளித்து, அவரது மூச்சு நின்றுவிடாமல் போராடினார். ஈவாவின் இந்த அசாத்திய மன உறுதியால், நிக் மரணத்தின் விளிம்பிலிருந்து நூலிழையில் உயிர் பிழைத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

Advertisement

இந்த பயங்கர சம்பவத்திற்குப் பிறகு, நிக் குணமடைந்து வீடு திரும்பியதும் ஈவாவிடம் தனது திருமண விருப்பத்தைத் தெரிவித்தார். அதன்படி, விபத்து நடந்த அதே ஆகஸ்ட் மாதத்தை இனிமையான நினைவாக மாற்றும் வகையில், கடந்த ஆகஸ்ட் மாதம் இருவரும் தம்பதிகளாக இணைந்தனர். காதலனின் உயிரைக் காப்பாற்றிய ஈவாவின் இந்த வீரச் செயலைப் பாராட்டி, பால்மைரா தீயணைப்புத் துறை அவருக்கு ‘லைஃப்சேவர்ஸ்’ விருது வழங்கி கௌரவிக்க உள்ளது. அவசர காலத்தில் முதலுதவி அறிவும், மனதிடமும் எவ்வளவு முக்கியம் என்பதை இந்த ஜோடியின் வாழ்க்கை உணர்த்துகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in