CRIME
அய்யோ கொடுமையே..! 3 இளைஞர்கள் நடத்திய வெறிச்செயல்… மகனைக் காப்பாற்ற முயன்ற தாய்க்கு நேர்ந்த கொடூரம்… கண் கலங்க வைக்கும் சோகச் சம்பவம்..!!
டெல்லியின் நஜஃப்கர் பகுதியில் உள்ள சாம்தா கிராமத்தில், 51 வயது மதிக்கத்தக்க சீமா என்ற பெண் தனது மகனைக் காப்பாற்ற முயன்றபோது மர்ம நபர்களால் குத்திப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இவரது கணவர் கமல் சௌகான் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
சீமாவின் மகன் துருவ் மீது மூன்று இளைஞர்கள் கொண்ட கும்பல் திடீர் தாக்குதல் நடத்தியுள்ளது. தன் மகனுக்கு ஆபத்து ஏற்படுவதைக் கண்ட தாய் சீமா, உடனடியாக குறுக்கிட்டு அவர்களைத் தடுத்துள்ளார். அப்போது ஆத்திரமடைந்த அந்த கும்பல் சீமாவைக் கத்தியால் குத்தியுள்ளது. தடுக்க வந்த அவரது கணவரும் காயமடைந்துள்ளார்.
இந்த கொடூரச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தகவலறிந்த காவல்துறையினர் உடனடியாக விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதில் முக்கியக் குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தலைமறைவாக உள்ள மற்ற இருவரைத் தேடும் பணியில் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
