“நீங்க மட்டும் வீட்டுக்கு போங்க..!” 3 பிள்ளைகளையும் டாக்ஸியில் அனுப்பிவிட்டு மாயமான தாய்.. 4 மாதங்களாக நீடிக்கும் மர்மம்… திடுக்கிடும் பின்னணி..!! – cinefeeds
Connect with us

CRIME

“நீங்க மட்டும் வீட்டுக்கு போங்க..!” 3 பிள்ளைகளையும் டாக்ஸியில் அனுப்பிவிட்டு மாயமான தாய்.. 4 மாதங்களாக நீடிக்கும் மர்மம்… திடுக்கிடும் பின்னணி..!!

Published

on

உத்தரகண்ட் மாநிலம் பித்தோராகர் மாவட்டத்தின் தார்சுலா தாலுகா பாமன்காவ் பகுதியைச் சேர்ந்த தீபக் ராம் என்பவரின் மனைவி புஷ்பா தேவி, தனது மூன்று குழந்தைகளையும் தனியாக டாக்ஸியில் வீட்டிற்கு அனுப்பிவிட்டு, தான் மட்டும் மர்மமான முறையில் மாயமான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஜூன் 15-ஆம் தேதி புஷ்பா தேவி தனது தந்தை மற்றும் மூன்று குழந்தைகளுடன் முன்சியாரி பகுதிக்கு வந்துள்ளார். அதன் பிறகு, திடீரென தனது பிள்ளைகள் மூவரையும் மட்டும் ஒரு டாக்ஸியில் ஏற்றி வீட்டிற்கு அனுப்பிவைத்த அவர், தான் மட்டும் முன்சியாரியிலேயே தங்கிவிட்டார்.

இதற்கிடையில், புஷ்பா தேவி தனது பெற்றோர் வீட்டிற்கும் செல்லவில்லை, புகுந்த வீட்டிற்கும் வரவில்லை என்பதை கணவர் தீபக் ராம் அறிந்து அதிர்ச்சியடைந்தார். பல இடங்களில் தேடியும் தனது மனைவியைப் பற்றிய எந்தவொரு தகவலும் கிடைக்காததால், தீபக் ராம் கடந்த வியாழக்கிழமை முன்சியாரி காவல் நிலையத்தில் தனது மனைவியைக் கண்டுபிடித்துத் தருமாறு எழுத்துப்பூர்வமாகப் புகார் அளித்துள்ளார். இந்தப் புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப் பதிவு செய்து, குழந்தைகளை அனுப்பிவிட்டு மர்மமான முறையில் மறைந்து போன பெண்ணைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in