CRIME
நடுவானில் மாயமான ஹெலிகாப்டர்.. கண் இமைக்கும் நேரத்தில் நடந்த கொடூரம்.. சம்பவ இடத்திலே துடிதுடித்த 6 பேர்.. நெஞ்சை உலுக்கும் சோக சம்பவம்..!1
உத்தரகண்ட் மாநிலத்தின் பத்ரிநாத் பகுதியில் இருந்து டேராடூன் நோக்கிப் புறப்பட்ட ‘டிரான்ஸ் பாரத் ஏவியேஷன்’ நிறுவனத்திற்குச் சொந்தமான ஹெலிகாப்டர் ஒன்று, சாமோலி மாவட்டம் ஜோஷிமத் பள்ளத்தாக்கு பகுதியில் பறந்தபோது திடீரெனக் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்து மாயமானது. அடர்ந்த மேகமூட்டம், கனமழை மற்றும் பனிப்பொழிவு போன்ற மோசமான வானிலை காரணமாக இந்த விபரீதம் அரங்கேறியுள்ளது. ஹெலிகாப்டர் மாயமானதைத் தொடர்ந்து, இந்திய ராணுவம், மாநில பேரிடர் மீட்புப் படை மற்றும் சாமோலி மாவட்ட நிர்வாகத்தினர் இணைந்து போர்க்கால அடிப்படையில் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர்.
தீவிரத் தேடுதலின் முடிவில், ஜோஷிமத் அருகே உள்ள சாய் கிராம மலைப்பகுதியில் ஹெலிகாப்டர் மோதி விபத்துக்குள்ளானது கண்டறியப்பட்டு, அதன் பாகங்கள் மீட்கப்பட்டன. இந்த கொடூர விபத்தில் ஹெலிகாப்டரை இயக்கிய டெல்லியைச் சேர்ந்த பைலட் ஹிமான்ஷு மற்றும் பெங்களூரைச் சேர்ந்த 5 ஆண் பயணிகள் (பிரதாபா, அருண், சங்கர் கௌடா, சுதீர், நடராஜா) உட்பட ஹெலிகாப்டரில் இருந்த 6 பேருமே சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்தில் சிக்கியவர்களில் ஒருவர் பெங்களூரு குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் அருண் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தத் துயரச் சம்பவத்தைத் தொடர்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டிரான்ஸ் பாரத் ஏவியேஷன் நிறுவனத்தின் அனைத்து ஹெலிகாப்டர் சேவைகளும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
