“இனி இவ என் பொண்டாட்டி..!” நடுரோட்டில் திருமணமான பெண்ணிடம் அநாகரிக ஆட்டம் போட்ட வாலிபர்… பரபரப்பு பின்னணி..!! – cinefeeds
Connect with us

CRIME

“இனி இவ என் பொண்டாட்டி..!” நடுரோட்டில் திருமணமான பெண்ணிடம் அநாகரிக ஆட்டம் போட்ட வாலிபர்… பரபரப்பு பின்னணி..!!

Published

on

பீகார் மாநிலம் சமஸ்திபூர் கான்பூர் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில், திருமணமான பெண் ஒருவரின் விருப்பத்திற்கு மாறாகக் குந்தன் குமார் என்ற வாலிபர் சப்பாராகச் சிந்தூரம் இட்டு, அவளைக் கட்டாயத் திருமணம் செய்துகொண்டதாகக் கூறி அநாகரிகமாக நடந்துகொண்ட அதிர்ச்சிச் சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த அநாகரிகச் செயல் பொதுவெளியில் அரங்கேறியபோது, அங்கிருந்த ஏராளமான ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் என அனைவரும் தட்டிக்கேட்காமல், வேடிக்கை பார்த்தபடி அப்பெண்ணைக் கேலி செய்து சிரித்துள்ளனர். இச்சம்பவத்தைக் கண்டித்து பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில், கான்பூர் போலீசார் உடனடியாக வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர்.

இந்த வழக்கின் முக்கியக் குற்றவாளியான குந்தன் குமாரைப் போலீசார் பெகுசராய் பகுதியில் வைத்து அதிரடியாகக் கைது செய்துள்ளனர். காதல் விவகாரம் தொடர்பாக இந்த விபரீதம் நடந்திருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படும் நிலையில், இச்சம்பவத்தை வேடிக்கை பார்த்த பிற கிராம மக்கள் மற்றும் இந்த அநாகரிக வீடியோவை இணையத்தில் பரப்பிய நபர்களைப் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். பொதுவெளியில் பெண்ணின் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கியுள்ள இந்தச் சம்பவம், தற்போது நாடு முழுவதும் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in