CRIME
“என்னை உங்க அண்ணனா நெனைச்சுக்கோங்கமா…” நள்ளிரவில் பைக்கில் வந்த இரண்டு அந்நியர்கள்… பயந்து ஓடிய முஸ்லீம்பெண்.. க்ளைமாக்ஸில் நடந்த அந்த நெகிழ்ச்சி ட்விஸ்ட்..!!
நள்ளிரவின் நிசப்தத்தில், டெல்லியிலிருந்து தனது கிராமத்திற்கு வந்து கொண்டிருந்த ஒரு முஸ்லிம் பெண், பேருந்து ஓட்டுநரின் அலட்சியத்தால் கிராமத்திற்கு இரண்டு கிலோமீட்டர் முன்பாகவே இறக்கிவிடப்பட்டுள்ளார். இருள் சூழ்ந்த அந்த நள்ளிரவு நேரத்தில், அந்தப் பெண் பயத்துடனும் தவிப்புடன் தனியாகக் கிராமத்தை நோக்கி நடந்து செல்லத் தொடங்கியுள்ளார். அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த இருவர், தனியாக நடந்து சென்ற அந்தப் பெண்ணைக் கண்டு வண்டியை நிறுத்தியுள்ளனர். நள்ளிரவில் அடையாளம் தெரியாத நபர்களைக் கண்டதும் அந்தப் பெண் பெரும் அச்சமடைந்து அங்கேயே உறைந்து நின்றுள்ளார்.
ஆனால், பைக்கில் இருந்து இறங்கிய அந்த இந்து இளைஞர்கள், “பயப்படாதீர்கள் சகோதரி, இந்த நள்ளிரவு நேரத்தில் எங்கிருந்து வருகிறீர்கள்? ஏன் தனியாகச் செல்கிறீர்கள்?” என்று மிகுந்த மரியாதையுடன் விசாரித்துள்ளனர். அதற்கு அந்தப் பெண், தனது மொபைல் போன் ஸ்விட்ச் ஆஃப் ஆகிவிட்டதால் குடும்பத்தினரைத் தொடர்பு கொள்ள முடியவில்லை என்ற விவரத்தைக் கூறியுள்ளார். உடனே அந்த இளைஞர், “பதற்றமடைய வேண்டாம் சகோதரி, என்னை உங்கள் சொந்த சகோதரனாக நினைத்துக் கொள்ளுங்கள். முதலில் என் போனிலிருந்து உங்கள் தந்தை அல்லது சகோதரனிடம் பேசுங்கள்” என்று கூறி தனது கைப்பேசியைக் கொடுத்து அந்தப் பெண்ணின் பயத்தைப் போக்கியுள்ளார்.
குடும்பத்தினரிடம் பேசிய பிறகு அந்தப் பெண்ணை வீட்டில் கொண்டு போய் விடுவதாக அந்த இளைஞர்கள் கூறியுள்ளனர். ஆனால், பைக்கில் மூன்று பேர் செல்வது சிரமம் என்பதால், அந்த இந்து வாலிபர் தனது நண்பனிடம், “நீ இந்தச் சகோதரியைப் பைக்கில் பத்திரமாக வீட்டில் கொண்டு போய் விடு, நான் பின்னால் நடந்தே வருகிறேன்” என்று கூறி மனிதாபிமானத்தின் உச்சத்தைத் தொட்டுள்ளார். சமூக வலைத்தளங்களில் காட்டுத்தீயாய் பரவி வரும் இந்தக் காணொளி, ஒருவேளை விழிப்புணர்வுக்காகத் திட்டமிட்டு எடுக்கப்பட்ட (Scripted) பதிவாக இருந்தாலும், அது சமூகத்திற்குச் சொல்லும் மனிதாபிமானக் கருத்து மிகவும் உன்னதமானது என்று நெட்டிசன்கள் இந்த இளைஞரின் செயலைப் பாராட்டி வருகின்றனர்.
