LATEST NEWS
காலை 5.30 மணிக்கு நான் தூங்கிட்டு இருக்கும் போது கைது பண்ணிட்டாங்க.. எதுக்குன்னே தெரியல… நாதக கார்த்திகா குற்றசாட்டு…!!
தாராபுரம் இடைத்தேர்தல் பரப்புரையின்போது தமிழக முதல்வர் விஜய் வந்த பாதையில், அனுமதியின்றி பிரச்சாரம் மேற்கொண்டதாக நாம் தமிழர் கட்சி (நாதக) வேட்பாளர் கார்த்திகா மீது கலவரம் செய்ய முயன்றதாக காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக அதிகாலையிலேயே கார்த்திகாவை போலீசார் அதிரடியாகக் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட நாதக வேட்பாளர் கார்த்திகாவை போலீசார் தாராபுரம் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து தாராபுரம் காவல் நிலைய வளாகத்தில் ஏராளமான செய்தியாளர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் குவிந்திருந்தனர்.
அப்போது காவல் நிலையத்திற்குள் அழைத்துச் செல்லப்பட்ட கார்த்திகா, அங்கிருந்த செய்தியாளர்களிடம் ஆவேசமாகப் பேசினார். “காலை 5.30 மணிக்கு நான் தூங்கிட்டு இருக்கும் போது போலீசார் என்னை கைது பண்ணியிருக்காங்க.. எதுக்குனே தெரியல” என்று குற்றச்சாட்டைக் கூறியபடியே அவர் காவல் நிலையத்திற்குள் சென்றார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
